இலங்கை::யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது 15000 இராணுவப் படையினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 50,000 படையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிபபிட்டுள்ளார்.
மொத்த இராணுவத்தில் எட்டு வீதமான படையினரே தற்போது யாழ்ப்பாண குடாநாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில் கிரமமான முறையில் படையினர் யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேச்சாதிகாரமாக நாட்டின் எந்தவொரு பகுதியிலும் படையினரின் எண்ணிக்கை கூட்டவோ அல்லது குறைக்கவோ படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment