Friday, June 1, 2012

மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!

Friday, June, 01, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (31.5.2012) நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரத்தினம், மட்டக்களப்பு மாநகர பிரதியமேயர் ஜோர்ஜ் பிள்ளை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்கிறிதரன் உட்பட அதிகாரிகள், படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது பல் வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் திட்டங்களின் முன்னேற்றம் ஆராயப்பட்டன.

No comments:

Post a Comment