Friday, June 1, 2012

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று காலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இந்தியர்கள் பலியானார்கள்!

Friday, June, 01, 2012
மெல்போர்ன்::ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று காலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இந்தியர்கள் பலியானார்கள்.

தீ விபத்து நடந்தபோது அந்த வீட்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களுடைய தாயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தை போலீஸார் கொலை மற்றும் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸார் விசாரணை மேற்கொண்டிருப்பதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படாததாலும் இப்போது என்னால் உறுதியாக எதுவும் கூறமுடியாது என்று போலீஸ் உயர் அதிகாரியான ஜியோப் மேஹர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment