Friday, June 1, 2012

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

Friday, June, 01, 2012
பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் நாற்பது இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர்.

அரசாங்க விமானமொன்றின் மூலம் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும். இறுதி நிமிடத்தில் இந்த நாடு கடத்தும் உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நாடு கடத்தும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை சூழ்நிலையைக் காரணம் காட்டி நாடு கடத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

பலவந்தமாக புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதனால் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை கண்காணிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந் அறிக்கையை மேற்கோள் காட்டி நீதவான் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment