Thursday, June 07, 2012இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி லண்டனில், பிரதமர் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானிய மகாராணி எலிசபத்தினால் வழங்கப்பட்ட விருந்துபசாரம் நடைபெறுவதற்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், என்ன விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதிநிதிகளும் நேற்றைய தினம் பிரித்தானியாவிலிருந்து ரோம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரோமில், பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகையுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment