Thursday, June 07, 2012இலங்கை::இலங்கை சென்றிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட யு.கே.ரி.வி நிறுவனத்தின் ஊடகவியலாளர் சிராணி சபாரட்ணத்திடம் 5 கடவூச்சீட்டுகள் இருப்பதாக இலங்கை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இவரும், அவரது கணவரும் தனித்தனியாக இலங்கை சென்றிருந்தாக குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சிராணி சபாரட்ணம், வன்னி மோதல்கள் நடந்த போது, இலங்கை சென்றிருந்த போதிலும் எவரும் அவரை கவனம் செலுத்தியிருக்கவில்லை என உயர்மட்ட தரப்புத் தகவல்கள நேற்று தெரிவித்தன.
சிராணி சபாரட்ணமும், அவரது கணவரும், பல முறை இலங்கைக்கு சென்று, சுற்றுலா தொடர்பான திரைப்படம் ஒன்றை தயாரிக்க போவதாக கூறினாலும் அப்படியான திரைப்படங்கள் எதுவுமில்லை என அந்த தகவல்கள் கூறின. இவர்கள் பல முறை, பல்வேறு கடவூச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை சென்றிருந்ததை, பிரித்தானியாவின் எம்.ஐ.6 புலனாய்வு பிரிவும் அறிந்திருந்ததாக தெரியவருகிறது எனவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment