Thursday, June 7, 2012

ஐ.நா அதிகாரிகள் இலங்கை செல்ல அனுமதி கேட்டு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இன்னும் பதில் அனுப்பவில்லை -கருணாதிலக அமுனுகம!

Thursday, June 07, 2012
இலங்கை::ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் அனுமதி கேட்டு அனுப்பியுள்ள கடிதத்துக்கு, வெளிவிவகார அமைச்சு இன்னும் பதில் அனுப்பவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு விவாதங்களும் இடம்பெறவுள்ளன. ௭னினும் இலங்கை தொடர்பில் ௭வ்விதமான தீர்மானங்களோ பிரேரணையோ இம்முறை கூட்டத் தொடரில் கொண்டுவரப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க இந்த 20 ஆம் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இதன் அமர்வுகளில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் ஆலோசகர் நிஷான் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஷவேந்திர பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையிலிருந்து ஜெனீவா செல்லவுள்ளனர்.

இவர்களுடன் ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்து மனித உரிமைப் பேரவையின் 20 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment