Tuesday, June 26, 2012
லண்டன்::லண்டன் அல்பெர்டன் பகுதியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தியாகிகள் தின நிகழ்வுகள் தோழர் சிராப் தலைமையில் இடம்பெற்றது.
திருமதி ரவி தேவி அவர்களின் விளக்கேற்றலுடனும், இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடனும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வின் சிறப்பு பேச்சாளர் தோழர் சிவலிங்கம், இலங்கை இந்தியஒப்பந்தம் ஏட்ப்படுத்தப்பட்டு, இருபத்தி ஐந்து வருடங்கள் பூர்த்தியாக வுள்ள நிலையில், இலங்கையின் சமகால
நிலைமைகளையும், அன்று மேற்கொள்ளப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பான முற்ச்சிகள் எவ்வளவு
தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ள பட்டிருக்கின்றன என்ற பொருளில் ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார்.
தோழர் சிராப்பின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்ச்சியாக தோழர் ரவியினால் தயாரிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பான விவரண படத்தொகுப்பு ஒன்றும் திரையிடப்பட்டது. இருபத்தைந்து நிமிடங்களில், முக்கிய நிகழ்வுகளை தொகுத்து காட்ட எடுத்த முயற்ச்சி பயனுள்ளதாக இருந்தது.
தோழர் ஸ்டான்லி அவர்கள் அருமையான கவிதை ஒன்றை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முன்னாள் வட கிழக்கு மாகான முதல்வர் தோழர் வரதராஜ பெருமாளின், தோழர்களுக்கான செய்தி ஒன்றும் வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை தோழர் போல் தொகுத்து வழங்கினார். இறுதி நிகழ்வாக பேசப்பட்ட விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. விபரங்கள் பின்னர் பதிவிடப்படும். இரவுப்போசனத்துடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
சுவிட்சர்லாந்த் பேர்ன் நகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது!
24.06.2012 அன்று மாலை 15.00 மணியிலிருந்து மாலை 17.00 மணிவரை சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தோழர் இராஐன் அவர்கள் நிகழ்விற்க்கு தலைமை தாங்கினார். இதுவரை காலமும் மக்களின் விடியலுக்காக மரணித்த தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும்,சக அமைப்பின் தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.பத்மநாபா ஈ.பி.ஆர.;எல்.எவ் தோழர்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களான புளொட்,ஈ.என்.டி.எல்.எவ், தோழர்கள் மற்றும் சமூகஅக்கறையுள்ளவர்களும் பங்குபற்றியிருந்தனர் .
புளொட் அமைப்பின் சார்பாக தோழர் குமார்;,பத்மநாபா ஈ.பி.ஆர.;எல்.எவ் ஜேர்மன் கிளையின்சார்பாக தோழர்அலெக்ஸ் மற்றும் தோழர்களான அன்ரன்,ஆனந்தன்,சுதா ஆகியோரும் உரை நிகழ்தினார்கள். மரணித்த தோழர்களின் தியாகங்கள்,அர்பணிப்புக்கள்,இன்றய சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் எவ்வகையான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன தொடர்பாகவும் அங்கு உரையாற்றியவர்களினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கட்சியின் தலைமைக்குழுவின் உறுப்பினரான தோழர் வரதராஜப்பெருமாள் அவர்களினால் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்ட தியாகிகள் தின செய்தியும் வாசிக்கப்பட்டது தோழர் பிரபா அவர்களினால் தோழர் நாபாவின் நினைவாக கவிதையொன்றும் வாசிக்கப்பட்டதுதோழர் பாஸ்கரன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
சுவிஸ் கிளை

No comments:
Post a Comment