Tuesday, June 26, 2012

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள்களின் தியாகிகள் தின செய்தி!

Tuesday, June 26, 2012
சென்னை::அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல்மிகு தோழர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கனிந்த புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது கட்சியின் செயலாளர் நாயகமும் எமது பெருமைக்குரிய அருமைத் தோழருமான பத்மநாபா அவர்களும் அவரோடு கட்சியின் புரட்சிகரச்செயற்திட்டங்களிலும் மக்களுக்கான தொண்டுகளிலும் இணைபிரியாத் தோழர்களாக இருந்த தோழர் கிருபாகரன் தோழர் யோக சங்கரி தோழர் கமலன் உட்பட பன்னிரு தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஜுன் 19ம் நாளை நாம் வருடாவருடம் தியாகிகள் தினமாக நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடி வருகின்றோம். அதற்காக இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் இணைந்து புரட்சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தோழர் பத்மநாபா அவர்கள் நடைமுறையில ஈழமக்களுக்கான புரட்சிகர விடுதலைப் போராட்டத்தோடு; தன்னை முழுமையாக அhப்பணித்தவரென்றாலும் அவர் ஈழத் தேசியவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்திருந்தவரல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உடனடியாக முடிவுகட்டவேண்டுமென்பதில் குறியாக இருந்தவnhனினும் அவர் இலங்கை மக்கள் அனைவரையும் நேசித்தார்: இலங்கை தழுவிய ஒரு சோசலிசப் புரட்சியையே அவர் தனது நீண்டகால அபிலாஷையாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சர்வதேசிய புரட்சிவாதி: உலகம் முழுவதுவும் அனைத்து மக்களும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதார சுரண்டல்களிருந்தும் அரசியல் அதிகார அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதில் அவாக் கொண்டிருந்தார். அதனால் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களோடும் புரட்சிகர இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்

தோழர் நாபாவின் மனிதாபிமான அணுகுமுறையும்;, மாற்றுக் கருத்தாளர்களை மதிக்கின்ற பண்பும், முற்போக்கானவர்களிடையே எப்போதும் வேற்றுமையிலும் ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தி விடாப்பிடியாக உழைத்தமையும் எதிர்கால மக்கள் விடுதலைப் போராளிகளுக்கும் சமூக ஜனநாயக விரும்பிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் உதாரணங்களாகும் என்பதில் ஐயமில்லை

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலைமைகளை குறிப்பாக நாட்டிலுள்ள தமிழ் அரசியற் சக்திகளின் நிலைமைகளையும் தன்மைகளையும் மேலைத்தேயத் தமிழர்களின் அரசியற் செல்வாக்குகளையும் அத்துடன் அரச அதிகாரத்திலுள்ளவர்களின் அகங்கார நிலைப்பாடுகளையும் சந்தேகங்களை நிறைக்கும் செயற்பாடுகளின்; போக்குகளையும் மேலும் இலங்கையின் அரசியற் பொருளாதாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பிராந்திய சர்வதேச சக்திகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளையும் நாம் இன்றைய காலகட்டத்தில் தெளிவாகவும் சரியாகவும் வகுத்து தொகுத்து ஆய்ந்து கணிப்பீடுகளை மேற்கொள்வது எமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிhகாலத்திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட எதிர்கால அரசியல் வாழ்வு பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய பங்கு தொடர்பான முடிவுகளையும் எடுப்பதற்கு அவசியமானவைகளாகும்

இலங்கைத் தமிழர்களின் போராட்டம் அரசியல் பொருளாதார சமூக நியாயங்களோடும் புனிதமான இலட்சியங்களோடும் தொடங்கப்பட்ட ஒன்றே. அந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென குறித்துக் கொண்ட இலக்குகளில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்;வொருவரும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட போது தமது சுயநலன்களுக்கான இலக்குகளோடு ஈடுபடத் தொடங்கினார்கள் என்றில்லை. நாடாளுமன்றப் பதவி, நாடாளுமன்றப்பாதை என்ற இலக்கணத்துக்குள்; ஈடுபட்டிருந்தவர்களிற் கூட பதவிகளைப் பிடித்து அதிகாரங்களில் அமர வேண்டும் அல்லது பதவிகளினூடாக மக்கள் விரோதமான முறைகளில் தமது சொந்த வாழ்வுக்குக் கொழுப்பேற்றி வளங்களைக்குவித்துக் கொள்ள வேண்டும் என்றிருந்தவர்கள் மிகவும் ஒருசிலரே. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன. போராட்ட காலத்தில் வௌ;வேறு இயக்கங்கள் இருந்தனதான்: அவை தமக்கிடையே கொள்கை வேறுபாடு, போராட்ட அணுகுமுறை வேறுபாடு, சமூக அரசியற் கண்ணோட்ட வேறுபாடு என்பவைகளால் வேறுபட்டன, பிளவுபட்டன, போட்டியிட்டன, ஏன்! மோதியும் கொண்டன. ஆனால் இன்று தமிழர்கள் மத்தியில் பாராளுமன்றப் பதவிகளுக்காகவும் அல்லது மாகாண சபைப் பதவிகளுக்காகவுமே போட்டி, கழுத்தறுப்பு, ஆள்கூட்டல், குழுச் சேர்த்தல், ஆளுக்கெதிராக ஆள் அவதூறு பரப்பல், யுத்த அழிவுகள் பற்றி ஒப்பாரி வைத்தல் ராஜபக்சாக்களுக்கு எதிராகக் கோசமெழுப்புதல், இராணுவத்துக்கு எதிராக கொட்டி முழங்கல் ஏன்! ஒற்றுமைக்குக் கோரிக்கை விடல் என்பவைலெல்லாம் தேர்தல் பதவி நோக்கங்களிலேயே நடைபெறுகின்றன

இன்றைய பதவி அரசியற் களத்தில் நாம் எம்மை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள அதற்கான அரசியற்பண்பாட்டைக் கடைப்பிடிக்கத் தயாரா? எம்மிடம் இதுகாலவரை வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன பண்புகளும் குணங்களும் எம்மைப் பற்றிய எமது கருத்துக்களும் அதற்கு இடம் கொடுக்குமா? பதவி மற்றும் அதிகார அரசியலுக்கு மாறும்போது அது தோழர்களை மாற்றும், ஆதரவாளர்களை மாற்றும், நண்பர்களை மாற்றும், ஏன் பழகுகின்ற பேசுகின்ற மனிதர்களேயே மாற்றும்.இன்றிருக்கும் உறவுகள் தொடர்புகள் சந்திப்புக்கள் அத்தனையையும் அது மாற்றிவிடும். ஆரசியலில் மாறிக் கால் வைக்கம் போது வாழ்வின் கூட்டிலும் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படவே செய்யும். புதவி அதிகார அரசியலில் ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணனும் தம்பியும் பதவி வந்த பின் நீ யாரோ நான் யாரோ! பதவி அதிகார அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை. அதில் கொள்கைகளும் இல்லை வாய்மைகளுக்கும் வாய்ப்பில்லை. தோழமை என்பதற்கு துளியும் இடமில்லை. இருந்தாலும் அது நுனி நாக்கிலே ஏமாற்றுவதற்கு மாத்திரமே இருக்கும். இங்கு புதவியைப் பிடிப்பதுவும் கிடைத்த பதவியைத் தக்க வைப்பதுவுமே இலட்சியம் கொள்கை குறிக்கோள். இவற்றை நாம் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலில் நாம் வெற்றிகரமாக இல்லை என்று கவலை கொள்வதில் அர்த்தமில்லை

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

இலங்கையின் அரசியலில் இரண்டு பக்க இனவாத சுயநல சக்திகளும் ஒருவருக்கொருவர் துணையாகவே உள்ளனர். இருபகுதியினரும் ஒருவருக்கொருவர் எதிரிபோற் காட்டிக் கொண்டாலும் மோதிக் கொள்வது போல் பாவனை காட்டினாலும் ஒருவரையொருவர் பாதகாப்பதிலும் போஷிப்பதிலும் ஆளையாள் அந்தரங்கத்தில் அரவணைப்பாளர்களாகவே உள்ளனர். இதற்கிடையில் ஒரு நேர்மையான கொள்கை கொண்ட - மக்களின் உண்மையான அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் தேவையொன்று தமிழர்களுக்கு அவசியமாக உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கான இடைவெளி இன்று மிகவும் குறைவாகவே உள்ளதெனினும் அதற்கான முயற்சிகள் அவசியமற்றவையல்ல. அது சுத்தத் தமிழ் அரசியல் இயக்கமாகவே இருக்கும் என்று சொல்வதற்கும் நான் தயாரில்லை. யார்? எப்படிபட்டவர்கள்? எங்கிருப்போர்? எவ்வகைப்பட்ட அரசியலுடையோர் அதனை முன்னெடுப்பர் என்று இப்போதைக்கு என்னால் எதிர்வு கூறவும் முடியவில்லை. ஆனால், வரலாறு காலத்தின் கட்டாயத்தேவைகளுக்கான கருவிகளைப் பிறப்பித்தே தீரும்

எனது அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!
அவலை நினைத்துக் கொண்டு வெறும் உரலை இடிப்பதில் பலனில்லை. இங்கு கூடியிருக்கும் உங்களிற் பெரும்பான்மையானவர்கள் இருபத்தைந்து முப்பது வருட கால அரசியலை நிச்சயயமாகக் கடந்திருப்பீர்கள். எமது நினைவுகளும் நிலைமைகளும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. நான் இவற்றையெல்லாம் கூறுவதை விரக்தியின் வெளிப்பாடாகவோ அல்லது ஆற்றாமையின் கூற்றாகவோ கொள்ளாதீர்கள். மாறாக மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும் யதார்த்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறேன் . அதிலிருந்து எதிர்காலத்தைச் சிந்தியுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் விடயத்தில் ஒரு காலடி கூட முன்னே செல்லவில்லை ஆனால் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள், பத்து லட்சம்பேர் அகதிகளாகிவிட்டார்கள், ஐம்பதியாயிரத்துக்கும் மேற்பட்டோர் விதவைகளாகிவிட்டார்கள் இலட்சம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மக்களின் தேர்தல் அங்கீகாரத்தை நம்பித்தானா ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கும்!: புரட்சிகள் எதுவும் அப்படி நடக்கவில்லையே!:

அரச படைகளின் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் எமது போராட்டம் நடக்கவில்லையா! என கேள்விகள் உங்களிடையே எழக் கூடும்,இந்தியாவையும் மேலைத் தேய நாடுகளையும் நம்பித்தானா எமது போராட்டம் நடக்க வேண்டும்? அது கையாலாகத்தனமல்லவா? என்று நீங்கள் சீற்றம் கொள்ளவும் கூடும். நான் எல்லாவற்றுக்கும் இந்த இடத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் என்னைவிட அறிவாற்றல் உள்ளவர்கள் அனுபவங்களும் உள்ளவர்கள். திறந்த மனங்களோடு விவாதித்து சிந்திக்க உங்களுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனவே விவாதியுங்கள், சிந்தியுங்கள். தோழர் பத்மநாபாவும் பன்னிரு அருந்தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்படடு இருபதிரண்டாவது நினைவு நாளையொட்டி கூடியிருக்கும் இவ்வேளை தோழர் நாபாவும் பல்லாயிரக்கணக்கான ஈழப்போராளிகளும் செய்த தியாகங்களுக்கான அர்த்தங்களை எப்படி இலங்கை அரசியல் யதார்த்தமாக்குவது என்பதைச் சிந்தியுங்கள். பதவிகள், அரச சுகங்கள் மற்றும் பணம் குவிக்கும் வியாபாரங்கள் ஓடவில்லை என்றால் இன்றைக்கு தமிழர்களைப்பீடித்து நிற்கும் புறம்போக்கு வியாபார அரசியல் அதனது கடைகளை மூடிவிட்டு ஓடிவிடும் என்பது நிச்சயம். ஆனால் அது தானாக நடைபெறாது

அதற்கு:-இளைஞர்களும் ஆயுதங்களும் மட்டும் கொண்ட இயக்கம் சரியாகாது. அது அழிவை மட்டுமே தரும்! புரட்சிகரமான தலைமையின்கீழ் பரந்துபட்ட மக்கள் திரண்ட அஹிம்சைவழி மாற்றங்களை நிர்ணயிக்கும் அஹிம்சைவழியால் அயோக்கியங்கள் தோற்றோடும். குறைகள் குறையும் அது பொய்யர்களை விலக்கும் மெய்யர்களை மன்னிறுத்தும்: போலிகளைப்பின்தள்ளும் தியாகிகளை முன்னிழுக்கும:;அதனால் அறம் வெல்லும், நியாயங்கள் தழைக்கும் அது சமூகத்தைச் சிதைக்காது சீரழிக்காது சீர்திருத்தங்களைக்கொள்ளும்: அகதிகளை ஆக்காது ஆற்றல்களை அணிதிரட்டும்இலங்கையெங்கும் ஜனநாயக மாற்றங்கள் நிகழ்ந்துதான் தீரும்’ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், பிறப்புரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான சட்டங்களின் ஆட்சி இலங்கையில் தழைத்தே தீரும் என்று நம்புவோம்.
அது இலங்கை மக்களின் அரசியலிலும் குறிப்பாக தமிழர்களின சமூக பொருளாதார வாழ்விலும் முன்னேற்றகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம். நாம் விரும்புவது நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு சமூக முன்னேற்றத்துக்கு அச்சமூக மக்களின் வாழ்வுக்கு எவை நல்லவையோ எவை அவசியமானவையோ அவற்றுக்காக உழைப்பதாகவே எமது சமூக ஈடுபாடும் அமைய வேண்டும் என்று கூறி உங்கள் அனைவர் மத்தியிலும் தோழர் நாபாவின் நாமம் நீடு வாழ்க என விடை பெறுகிறேன்.

தோழமையுடன்
தோழர் வரதராஜப்பெருமாள்,

No comments:

Post a Comment