Tuesday, June 26, 2012
இலங்கை::கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுலாக்கு வது பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனிடம் சமர்ப்பிக்கவில்லை.
கடந்த மே மாதத்தில் தாங்கள் வொஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தானோ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களோ இலங்கையில் வெளி வரும் ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டது போன்று சமர்ப் பிக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று நிராகரித்தார்.
இதேவேளை, பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் தொடர்ச்சியாக பல தடவைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவது பற்றிய எந்தவொரு ஆவணத்தையோ இரகசித்திட்டத்தையோ சமர்ப்பிக்கவில்லையென்று திருமதி கிளின்டனை சந்தித்து நாடு திரும்பிய பின்னர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு களில் எவற்றுக்கு முக்கியத்துவமளித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றி தாங்கள் இதுவரை முடிவு எடுக்க வில்லை என்றும் அதற்கு பின்னரே அந்த சிபாரிசுகள் அமுலாக்கப்படும் என்றும் திரு. லலித் வீரதுங்க தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை களை நடைமுறைப்படுத்துவது பற்றிய அமைச்சரவை நியமித்த செயலணியின் தலைவராக திரு. வீரதுங்க இப்போது செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஞாயிறு ஆங்கில தினசரி தவ றான கருத்தை வெளியிடக்கூடிய வகையில் தகவல்களை ஜோடித்து இவ்விதம் எழுதியிருப்பதாக லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார். இந்தப் பத்திரிகையில் வெளியிட்ட ஆவணம் வொஷிங்டன் சென்றிருந்த எமது தூதுக்குழுவின் கவ னத்தை ஈர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆவணத்தில் நாம் அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார். தற்போது தமது தலைமையிலான செயலணி நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த சிபாரிசுகள் காலக்கிரமத்தில் அமுலாக்கப்படுவதற்கு முன்னர் நாம் அதனை அறிவிப்போம் என்றும் ஜூலை மாத நடுப்பகுதியில் இடைக்கால செயற்பாடொன்றை அமுலாக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment