Tuesday, June 26, 2012

டிப்பர் வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; பளையில் சம்பவம்!

Tuesday, June 26, 2012
இலங்கை::பளை, புதுக்காடு பகுதியில் நேற்று டிப்பர் வாகனம் மோதியதில் ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை டிப்பர் வாகனத்தை வீட்டிற்கு வெளியே எடுத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

குழந்தை டிப்பர் வாகனத்திற்கு கீழே இருப்பதை அறியாத தந்தை அதனை செலுத்துவதற்கு முற்பட்டபோது குழந்தை விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment