Wednesday, June 6, 2012

பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த நாட்டை வேறெந்த சக்திகளுக்கும் பறித்தெடுக்க இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, June, 06, 2012
இலங்கை::புலி பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த நாட்டை வேறெந்த சக்திகளுக்கும் பறித்தெடுக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்காக எந்தவொரு தியாகத்தையும் புரிந்து உலகின் சிறந்த நாடாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள், லண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

தாய் நாட்டை நேசிக்கின்றவர்களுக்கு ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் நன்றிகள் உரித்தாவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்...

லண்டன் பாக் லேன்ட் பகுதியில் இடம்பெற்ற இலங்கையர்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கி உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் வாழ்த்து தெரிவித்தும் லண்டன் வாழ் இலங்கையர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment