Wednesday, June, 06, 2012இலங்கை::வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 45பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலியிடம் தகவல் வழங்கும் போதே இரகசிய பொலிஸார் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்தும் தகவலளித்த பொலிஸார் கூறியதாவது,
போலிப் பெயர்கள் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்த இவர்கள் மேற்படி சட்டவிரோத பயணங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஜெயக்குமார் தருஷன் என்ற புலிச் சந்தேக நபரே, ஏனைய 44பேரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்' என்று இரகசிய பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்
No comments:
Post a Comment