Wednesday, June, 06, 2012இலங்கை::திருகோணமலை ஐயனார்கேணி வீதியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விமானி ஒருவர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இருவரும் இன்று முற்பகல் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இரவு திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் பாதுகாப்பு மற்றும் பொலிஸார் மீது புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் அமைப்பு அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குற்றச்செயல் தொடர்பில் எந்தவொரு தடயங்களும் கிடைக்காததால் தர்க்க ரீதியில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment