Tuesday, June 26, 2012

கல்கிஸ்ஸவிலுள்ள டயர் வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை பரவிய தீயினால் ஒருவர் உயிரிழந்ததுடன மேலும் நால்வர் காயமடைந்தனர்!

Tuesday, June 26, 2012
இலங்கை::கல்கிஸ்ஸ ஹோட்டல் வீதிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ பரவியமையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காலி வீதியின் கல்கிஸ்ஸவிலிருந்து மொறட்டுவை வரையான ஒருவழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வீதி தடைப்பட்டிருந்தமையால் இன்று காலை முதல் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக பதில் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டார்.

வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்தே வாகன நெரிசல் வழமைக்குத் திரும்பியதாக அவர் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸவிலுள்ள டயர் வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை பரவிய தீயினால் ஒருவர் உயிரிழந்ததுடன மேலும் நால்வர் காயமடைந்தனர்.

கொழும்பு மாநகர சபை மற்றும் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment