Tuesday, June 26, 2012

காஷ்மீர் பிரிவினைவாதிகளின் ஸ்டிரைக்கால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Tuesday, June 26, 2012
ஸ்ரீநகர்::200 ஆண்டுகள் பழமைவாய்ந்த் தர்கா தீவிபத்தில் எரிந்ததையடுத்து பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்த ஸ்டிரைக் காரணமாக காஷ்மீரில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் வாகனங்கள் ஒன்றிரண்டு மட்டும் இயங்கின. போக்குவரத்து இல்லாததால் அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. ..

200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஸ்தாகீர் சாகிப் தர்காவில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மண்டல கமிஷனர் இந்த துரதிருஷ்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சில நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என்று சட்ட அமைச்சர் அலி முகமது சாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...

தீ விபத்திற்கு சதி காரணமாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது. தீ விபத்தை அடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீயை அணைப்பதில் தீயணைப்பு படையினர் மந்தமாக செயல்பட்டதாகக் கூறி, தீயணைப்பு வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீதும் கல்வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து கன்யார் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment