Thursday, June 7, 2012

இலங்கை பாதுகாப்பு செயலாளர் - இந்திய பாதுகாப்பு அமைச்சரையும்,அமெரிக்க இராணுவத்தின் கூட்டு தலைவர்களின் பிரதானியையும் சந்திப்பு!

Thursday, June 07, 2012
இலங்கை::ஷன்ரீ-லா கலந்துரையாடலில் இறுதியில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களும், பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மற்றும் அமெரிக்க இராணுத்தின் கூட்டு தலைவர்களின் பிரதானி மார்டின் டெம்ஸ்ஸி ஆகியோரை சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக அமுல்படுத்தப்பட்டுள்ள, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி குறித்த விரிவான விளக்கம் அமைச்சர் பீரிஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

இலங்கையின் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை எடுத்துவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டுவதோடு, இருதரப்பு நட்புறவுகள் மூலம் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய அமெரிக்க மற்றும் இந்திய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

இதைத்தவிர சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க, இந்து சமுத்திரத்தில் இலங்கைக் கடற்படையினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, இலங்கை பாதுகாப்பு படைகளின் திறன்களை அதிகரிகரிக்கும் முகமாக, அவர்களுது பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புக்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment