Friday, June, 08, 2012இலங்கை::அரசாங்க புலனாய்வு பிரிவினரால், கொழும்பு நட்சத்திர விடுதியொன்றில் கைதுசெய்யப்பட்டு, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான ஸ்டுவர்ட் கோஸ்க்ரவ், இலங்கையில் தங்கியிருந்த போது, மேற்கொண்டு தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவரது மனைவியான செனல் 4 தொலைக்காட்சி தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்ணம், கடந்த 3 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.10 மணிக்கு சென்றிந்தார்.
அப்போது, இலங்கைக்குள் சென்றிருந்த ஸ்டுவர்ட், முதலில், இங்கிலாந்துக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு அதன் பின்னர், இலங்கைக்குள் மேற்கொண்ட சில தொலைபேசி அழைப்புகள் குறித்து புலனாய்வு பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர் தொலைபேசி அழைப்புகளை எடுத்த அனைத்து இலக்கங்களை அவரிடம் விசாரணை நடத்தப்படும் போது பெற்றுக்கொண்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர், கடந்த 5 ஆம் திகதி, அதிகாலை 3.50 அளவில், ஈ.கே 359 என்ற விமானத்தின் மூலம் அவர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
செனல் 4 பணிப்பாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பெயர்கள் இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களை நாடு கடத்தியதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment