Saturday, June 30, 2012

1006 ஜோடி இலவச திருமணத்தில் முறைகேடு அறநிலையதுறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

Saturday, June 30, 2012
சேலம்::இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் வாசுநாதன், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் வான்மதி, சென்னை அறநிலைய து றை உதவி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் நேற்று இரவு திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தவை அரசு செயலாளர் ராஜாராம் பிறப்பித்துள்ளார். 3 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் அறநிலையத்துறையின் சார்பில் சென்னையில் 1006 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 1006 ஜோடிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். இவர்களில் ஏராளமான ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக உளவுத்துறை நடத்திய விசாரணையில், திருமணம் ஆன ஜோடிகளும் முதல்வர் நடத்திய திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் திருமணம்

செய்து கொண்டது தெரி யவந்தது. இது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்ததாகவும் கூறப்பட்டது. இதன்காரணமாக அவர்கள் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

வவுனியா சிறைச்சாலை பிரச்சினை; விசாரணைகள் ஆரம்பம்!

Saturday, June 30, 2012
இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளால் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மூன்று உத்தியோகத்தர்களும் நேற்று மீட்கப்பட்டனர்.

வவுனியா கைதிகள் அநுராதப்புரத்திற்கு மாற்றம்!

கடந்த இரண்டு தினங்களாக வவுனியா சிறைச்சாலையின் அரசியல் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டிரு மூன்று காவலர்களும், காவல்துறை விசேட படைபிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை பதில் காவல்துறை ஊடக பேச்சாளர் சஜீவ மெதவத்த எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

காவல்துறை விசேட படைபிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்;டுள்ளார்.

இந்தநிலையில் அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்று கோரி, கடந்த சில தினங்களாக உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை பணய கைதிகளாக சிறைப்பிடித்தனர்.

இந்த நிலையிலேயே, காவல்துறையின் விசேட படைப்பிரிவினரால் குறித்த அதிகாரிகள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த அரசியல் கைதிகள் அனைவரும் அநுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள், இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே மூன்று சிறைச்சாலை காவலர்களும் ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும், வவுனியா பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இன்று வவுனியா பொலிஸார் சிறைச்சாலையில் பாரிய தேடுதல் ஒன்றினை நடத்தினர். வவுனியா பொலிஸாருடன் இணைந்து, சிறைக்காவலர்கள், விசேட அதிரடிப்படையினரும் இத்தேடுதலில் ஈடுபட்டதுடன் கைதிகளின் பாவனையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பொருட்களை கைதிகள் தம் வசம் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

சிறைக் கைதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலை காரணமாக காயமடைந்தவர்களே இவ்வாறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுயாதீன உரிமைகளை கொண்ட இலங்கை - இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!

Saturday, June 30, 2012
இலங்கை::இந்தியா எப்பொழுதும் அனைத்து மக்களுக்கும் சமனான, கௌரவத்தையும், உரிமைகளையும் வழங்கும் ஐக்கிய இலங்கையையே எதிர்பார்ப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்திருந்த அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இந்தியா திருப்தி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்...

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதற்காக இந்தியா தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்...

இலங்கைக்கான விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மேனன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினைக்கு அந்த நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்றும் இதன்பொருட்டு இலங்கையினால் கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்குள் அனைத்துப் பிரஜைகளும் சமத்துவம் நீதி சுயகௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் நேற்று ஜனாதிபதி... மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரமுகர்களை சந்தித்தார்

தமிழீழமே ஒரே இலக்கு என்றதனால் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது புலனாய்வுப்பிரிவினர் விசாரணை - திவயின!

Saturday, June 30, 2012
இலங்கை::தமிழீழமே ஒரே இலக்கு என்றதனால் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது புலனாய்வுப்பிரிவினர் விசாரணை - திவயின:-

தமிழீழமே ஒரே இலக்கு என கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனிடம் புலனாய்வுப்பிரிவினர் நேற்று மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஸ்ரீதரன், இந்தியாவில், புலிகளுக்கு ஆதரவான போல் நியூமன் என்ற பேராசியரிருடன் நேர்காணலில் கலந்துக்கொண்டதுடன், தமது ஒரே நோக்கம் ஈழம் எனவும் இதற்காக புலிகள் அமைப்பு 40 ஆயிரம் உயிர்களை தியாகம் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் தமிழர்களுக்கான தனிநாட்டை பெறபோவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தாகவும் அவர், புலிகளின் யாழ் பிராந்திய கட்டளை தளபதியாக இருந்த தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களில் 130 பேர் இலங்கையர் - வெளிவிவகார அமைச்சு!

Saturday, June 30, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையைச் சேர்ந்த 130 பேர் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்த நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுசன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் திசாநயக்க கூறினார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய மூன்று படகுகள் நேற்று முனதினம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவினை அண்மித்த கடற்பரப்பில் அந்த நாட்டின் கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை இரவிலும் இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 93 பேர் அடங்கிய படகொன்றை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த ஒருவார காலத்திற்குள் கிறிஸ்மஸ் தீவினை அண்மித்த கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதுடன் அவற்றிலிருந்த பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறையில் புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேரிடம் செய்மதித் தொலைபேசி!

Saturday, June 30, 2012
இலங்கை::ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னரே, வவுனியா சிறையில் உள்ள புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேர் உட்பட 321புலி உறுப்பினர்கள் சிறைச்சாலையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக வடபகுதியில் உள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டு உள்ளது.

சசி, ருவான், ருக்ஷான், கண்ணன், குருதரன் ஆகிய புலித் தலைவர்களிடம் செய்மதி தொலைபேசிகள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் அவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வழங்கியுள்ள தகவல்கள் ஒலிப்பரப்பபடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறையில் உள்ள இந்த புலி உறுப்பினர்களுக்கு, புலிகளின் ஆதரவாளர்களின் உதவிகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன - பாதுகாப்பு அமைச்சு!

Saturday, June 30, 2012
இலங்கை::புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துஇவ்வாறு புகலிடம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தமது பிள்ளைகள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றை வழங்குமாறு மேயரிடம் கோரியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வர்த்தகரின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும், வீசாவை நீட்டித்துக் கொள்ள இவ்வாறு போலி ஆவணமொன்று அவசியப்படுவதாக அந்நாட்டு சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு அமைய வர்த்தகர் போலி ஆவணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு பலர் போலியான முறையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அச்சுறுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்திவருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இவ்வாறு போலியான முறையில்மேற்குலக நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது - சம்பந்தன்!

Saturday, June 30, 2012
இலங்கை::அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேனனின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவின் மற்றுமொரு முனைப்பாகக் கருதப்பட வேண்டுமெனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்தமை குறித்து மேனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலும் இந்தசந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அர்த்தமுடையதாகவும், நோக்கமுடையதாகவும்இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதன்பின்னரே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து தீர்மானிக்க முடியும்என்பதனை மேனனுக்கு விளக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ஷிவ்சங்கர் மேனனை சந்தித்த போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளை வலிமை வாய்ந்ததாக மாற்றுவோம்: புதுவை விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி!

Saturday, June 30, 2012
புதுச்சேரி::பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை புதுவை வந்தார். பல்கலைகழக வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவரை கவர்னர் இக்பால்சிங், மத்திய மந்திரி நாராயணசாமி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, கண்ணன் எம்.பி., தலைமை செயலாளர் சத்தியவதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

பின்னர் பல்கலைக்கழக வெள்ளி விழா கட்டிடத்தில் உள்ள தெற்காசிய கலாச்சார படிப்பு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

புதுவையில் அமைந்துள்ள இந்த கல்வி மையம் மூலம் தெற்காசிய மக்களுக்கு இடையே கலாசாரம், பண்பாடு, தொடர்பு, புரிதலுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகம் தற்போது சிக்கலான காலத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியை பிராந்திய கூட்டுறவு மூலமாக அந்த நாடுகளின் அறிவார்ந்த தலைவர்கள் தீர்த்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

அந்த விளைவுகள் இந்தியாவுக்கு பல்வேறு படிப்பினையை தந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி நிழல் விழாதவாறு தெற்காசிய நாடுகளுக்குள் ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்க வேண்டும். நம்மிடம் ஏராளமான அறிவார்ந்த மக்கள் உள்ளனர். தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பை நல்ல ஒருங்கிணைந்த வலிமை வாய்ந்த கூட்டமைப்பாக மாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது.

சார்க் மேம்பாட்டு நிதியம் மூலமாக சமூக ரீதியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு, எரிசக்தி, குடிநீர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தெற்காசிய நாடுகளுக்குள் உறுதியான புரிந்துணர்வு அவசியம் ஆகும். தெற்காசிய பல்கலைகழகத்தின் வாளகம் ஒன்று டெல்லியில் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழா முடிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் புதுவை கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை ஜிப்மர் மருத்துவகல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்!

Saturday, June 30, 2012
இலங்கை::சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை தமது விருப்பின் பேரில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் தெரிவித்தார்.

மேற்படி தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட ஆணையார்களுள் ஒருவரான காமினி குளதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தார்.

தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவென விசேட நீதிமன்றங்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் விருப்பின் பேரில் இவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் பயிற்சி எடுக்காத, புலி உறுப்பினர்களல்லாதவர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்படுமென்பதனையும் அவ் ஆணையார் சுட்டிக்காட்டினார்.

மேலும் எவ்வித அரசியல் நோக்கமுமின்றி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால வரலாறை மறந்து அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் சிறைக் கைதிகளைக் கேட்டுக் கொண்டார்.

ஆணையாளர் தெரிவித்த தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவித்த மகசின் சிறைக் கைதிகள் தம்மை புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்து கடிதம் எழுதி ஆணையாளரிடம் ஒப்ப டைத்துள்ளனர். அநுராதபுரம், நீர்கொழும்பு, மகசின் சிறைச்சாலைகளிலுள்ள 700 தமிழ் கைதிகள் இத்தீர்மானத்தை உடனடி யாக அமுல்படுத்தக் கோரி கடிதம் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, June 29, 2012

இலங்கை தமிழர் மறுவாழ்வு ராஜபக்சேவுடன் சிவசங்கர் மேனன் பேச்சு!

Friday, June, 29, 2012
சென்னை::இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்த பின், தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தவும், மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தவும் இந் தியா நிதியுதவி வழங்கியது. எனினும், இன்னும் ஏராளமானோர் முகாம்களில் உள்ளனர். அத்துடன் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து வாபஸ் பெற்று, தமிழர் மறுவாழ்வுக்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பியும் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே, மற்றொரு தம்பி ராணுவ செயலர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை சந்தித்து சிவசங்கர் மேனன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெறுவது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக இலங்கை அமைச்சர்கள் பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மேனன் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. தமிழ் அரசியல் கட்சி தலைவர் ராஜவயோதி சம்பந்தனை சந்திக்கவும் மேனன் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், மேனனின் இலங்கை பயணம் குறி த்து அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பிரேசிலில் ரியோ&20 மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் & ராஜபக்சேவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஐ.மு. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல்!

Friday, June, 29, 2012
புதுடெல்லி::ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி தேர்தல், அடுத்த மாதம் 19&ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ. மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் சங்மா போட்டியி டுகிறார். தேர்தலில் போட்டியிடுவதால் மத்திய நிதியமைச்சர் பதவியை நேற்று முன்தினம் பிரணாப் ராஜினாமா செய்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில் அவரை முன்மொழிந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலை வர் கருணாநிதி, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் 480 பேர் கையெழுத்திட்டுள்ளனர். பிரணாப் சார்பாக மொத்தம் 4 செட் வேட்பு மனுக்கள் தயார் செய்யப்பட்டன. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று காலை 11 மணிக்கு பிரணாப் முகர்ஜி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா மற் றும் மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜ்யசபா செயலாளர் விவேக் குமாரி டம் வேட்பு மனுவை பிரணாப் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்...

ஐ.மு. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் நாளை சென்னை வருகை!

சென்னை::ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐ.மு. கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, ஆதரவு திரட்டுவதற்காக நாளை தமிழகம் வருகிறார். அவருக்கு திமுக, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து பிரணாப் வாக்கு சேகரிக்கிறார். பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24&ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 19&ம் தேதி நடக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ., அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகிறார். பிரணாப், சங்மா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில் தனது வேட்பு மனுவை பிரணாப் நேற்று தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, பிரதமர், சோனியா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்மொழிந்திருந்தனர். அதேபோல, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி முன்னிலையில் சங்மாவும் நேற்றே வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டுகிறார். இதன் முதல்கட்டமாக நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு சென்னை வரும் பிரணாப் முகர்ஜிக்கு விமான நிலையத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு கட்சிகளும் செய்து வருகின்றன. பிரணாப்பை வரவேற்று விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரை பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு காரில் கோபாலபுரம் செல்லும் பிரணாப், அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தனக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து அடையாறு பார்க் ஓட்டலில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் பிரணாப் கலந்து கொண்டு, திமுக எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பிரணாப் செல்கிறார். அங்கும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்களையும் சந்தித்து வாக்கு கேட்கிறார். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களை தனியாக சந்தித்து பேசவும் பிரணாப் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கான இடமும், நேரமும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் ஆந்திரா செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கிறார். சங்மா பிரசாரம் பிரணாப்பை எதிர்த்து போட்டிடும் சங்மா, தனது சொந்த மாநிலமான மேகாலயாவில் உள்ள துரா பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சித் தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கவும் சங்மா திட்டமிட்டுள்ளார்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்!

Friday, June, 29, 2012
தர்மபுரி::தர்மபுரியை அடுத்த குண்டல்பட்டியில் தே.மு.தி.க. அவைத்தலைவர் தம்பி. ஜே.சங்கர் மகள் சிந்து-தியாகராஜன் திருமணத்தை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. துணையுடன்தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே தொண்டர்கள் விருப்பத்திற்காகத்தான் நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகூட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசியல்வாதிகள் 15 சதவீத கமிஷன் வாங்கிக் கொண்டு பணிகளை ஓதுக்குவதால் பணிகளை எடுக்க காண்டிராக்டர்கள் முன் வருவது இல்லை.

சேலம் மாநகராட்சியிலும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆட்சியாளர்கள் எந்த வழியில் லஞ்சம் வாங்குகிறார்களோ அதே வழியில் அவர்களைப் பின்பற்றி அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள்.

பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் உள்ளிட்ட கிப்ட் பொருட்களை பள்ளி திறந்தவுடன் வழங்குவோம் என்றனர். ஆனால் பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. 40சதவீத மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இந்த பொருட்களை வழங்கியதாக தகவல்கள் வருகின்றன.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதை அரசு சரியாக பின்பற்றவில்லை. ஒரு மாதத்துக்கு பிறகு இப்போதுதான் கணக்கு எடுத்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும். நாங்கள் மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தோடு இருப்பவர்களை மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம். மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது இல்லை.

கேரளா நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. அங்கு அணை கட்டி நமக்கு வரும் தண்ணீரை தடுக்க முயற்சிக்கிறது. ஆனால் இங்கு உள்ள மணலை கொள்ளையடித்து கேரளாவிற்கு விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்று வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் சரியாக இருந்து இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் வந்து இருக்காது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆட்சியாளர்களே காரணம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நன்றாக ஆட்சி செய்தார். அதனால் அவர் தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது. அதன் பின்னர் யாரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் இளங்கோவன், தர்மபுரி நகர செயலாளர் வெங்கட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன!

Friday, June, 29, 2012
இலங்கை::அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன.

நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ள படகில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். இப் படகுகள் இலங்கையில் இருந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் இப்படகுகள் கைப்பற்றப்பட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று அதிகாலை மேலும் ஒரு படகு அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் படகில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 93 பேர் இருந்துள்ளனர். இவர்களும் இலங்கையர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்!

Friday, June, 29, 2012
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனித் தமிழீழதீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் இரண்டு பக்கங்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைதீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை, சோபித தேரர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டு வரும் சுமூகமான சூழ்நிலையை குழப்பக் கூடியஎந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர், இந்திய பிரதமரிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

UN compensates family of deceased Peacekeeper !

Friday, June, 29, 2012
Sri Lanka::An amount of USD 74,395.93 has been provided by the United Nations Department of Peacekeeping Operations, as compensation to the family members of late Staff Sergeant Priyawansa H.M.T of Sri Lanka Army Ordnance Corps (SLAOC) who was deceased while engaged in a peacekeeping mission in Haiti in 2011.

Staff Sergeant Priyawansa was attached to the 13th Contingent of the Sri Lanka Army UN Peacekeeping Operations Mission to Haiti (MINUSTAH) with Gemunu Regiment Peacekeeping troops and was assigned duties in Haiti since 01st February 2011. According to the office of the Sri Lanka Permanent Representative to United Nations, Staff Sergeant Priyawansa had died whilst serving at the ‘Jackmel’ Peacekeeping base in Haiti on 17th March, 2011.

The cash cheque was officially presented by Secretary Defence and Urban Development Mr Gotabaya Rajapaksa to the deceased soldier’s widow, Mrs R.M.T.T Rathnayake this afternoon (28), at the Ministerial premises. On a request made by Mrs Rathnayake, the compensation fund would be equally distributed and deposited to the accounts of their two children - Navodya Thathsarani Priyawansa and Kaweesha Methruwan Priyawansa.

Commander of the Army Lieutenant General Jagath Jayasuriya, the Sri Lanka Deputy Permanent Representative to the United Nations Major General Shaveendra Silva, Adjutant General of the Army Major General Kamal Gunaratne and Colonel Commandant of the SLAOC Brigadier M.Z.R Sallay were also present at the occasion.

புலிக்கு பிள்ளைகளை பாடசாலைகளில் பிடித்து கொடுத்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது 4ம் மாடியில் விசேட விசாரணை!

Friday, June, 29, 2012
இலங்கை::புலிக்கு பிள்ளைகளை பாடசாலைகளில் பிடித்து கொடுத்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது 4ம் மாடியில் விசேட விசாரணை:-

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

புலம்பெயர் (புலி)தமிழர்களினால் இயக்கப்படும் (புலி)தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த 'சமகால அரசியல் நிலைமைகள்' குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக (புலி)சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து தான் நான்காம் மாடிக்குச் சென்றதாகவும் அங்கு சுமார் 3 மணித்தியாலங்கள் வரை தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

புலம்பெயர் (புலி)தமிழர்களினால் இயக்கப்படும் (புலி)தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் அவ்விடயங்கள் இலங்கையின் இறையாண்மையினை பாதிப்பவையாக அமைந்துள்ளன எனவும் தன்னிடம் விசாரணை நடத்தியவர்கள் குறிப்பிட்டதாக (புலி)சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.

இதன்போது தன்னை ஒரு புலி உறுப்பினராகவும் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவிகள் செய்பவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்...

இந்த விசாரணையின் போது குறித்த செவ்வி தொடர்பாகவும், வெளிநாட்டு விஜயங்கள், வெளிநாட்டு தூதுவராலையங்களுடன் உள்ள உறவுகள், புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்கள் பற்றிய பல தரப்பட்ட கேள்விகளுடன் கடந்தகாலத்தில் புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பிருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக (புலி)சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசாரனை தொடரும் எனத் தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர் அழைக்கும் போது விசாரனைக்கு சமூகம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Thursday, June 28, 2012

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்பரில்!

Thursday, June 28, 2012
இலங்கை::தற்போது கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதம் முதலாம், எட்டாம் அல்லது பதினைந்தாம் திகதிகளில் அமையும் சனிக்கிழமைகளில் ஒன்றில் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான வேட்புமனுக் கோரலை தேர்தல்கள் செயலகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த மாகாண சபைகளுக்குரிய மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தில் இருந்து ஆரம்பமாகி, ஜூலை மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது.

குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் இறுதித் திகதி வேட்புமனுத் தாக்கலின் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம் - ரணில் விக்ரமசிங்க!

Thursday, June 28, 2012
இலங்கை::அரசாங்கம் முதலில் தேர்தல் நடத்த வேண்டியது வட மாகாணத்துக்கே என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அவசியமான மாகாணத்திற்கு தேர்தல் நடத்தாது அநாவசியமான மாகாணத்துக்கு தேர்தல் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விசேடமாக வடக்கில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட தற்போது தேர்தல் ஒன்று அவசியப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற பொது எதிர்கட்சி எதிர்ப்பு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், வடக்கில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்று வடக்கில் பிரபாகரன் செய்ததை இன்று அரசாங்கம் கேபி ஊடாக செய்து கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வயிற்றில் அடிக்காது நிவாரணம் வழங்க முறையான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் இருதரப்பினருக்கு இடையில் மோதல்: ஒருவரை காணவில்லை!

Thursday, June 28, 2012
இலங்கை::திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் இருதரப்பினருக்கு இடையில் மோதல்: ஒருவரை காணவில்லை:-

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் இருதரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஒருவர் காணாமல்போயுள்ளார்.

மீனவர்களிடையே இன்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைக்கைதிகள் இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

Thursday, June 28, 2012
இலங்கை::வவுனியா விளக்கமறியல் சிறைக்கைதிகள் இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்:-

வவுனியா விளக்கமறியல் சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பகல் முதல் கைதிகள் உணவை தவிர்த்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறைச்சாலை வளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

பெருந்துறை அருகே இன்று அதிகாலை சென்னை ரயிலில் பயங்கர தீ!

Thursday, June 28, 2012
ஈரோடு::சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், பெருந்துறை அருகே இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கார்டு மற்றும் சரக்கு பெட்டிகள் எரிந்து நாசமாயின. உடனடியாக ரயிலை நிறுத்தி மற்ற பெட்டிகள் கழற்றி விடப்பட்டதால் 1400 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து சாம்பலாயின. சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16041), சென்ட்ரலில் இருந்து நேற்றிரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. ரயிலில் 1400 பயணிகள் இருந்தனர். இந்த ரயில், இன்று காலை 10.45 மணிக்கு ஆலப்புழா சென்றடைய வேண்டும். மொத்தம் 22 பெட்டிகள் கொண்ட ரயிலில், கடைசி பெட்டியின் ஒரு பகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் கார்டுகளுக்கும் மற்றொரு பகுதி பார்சல்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டிபாளையம் ஸ்டேஷனை ரயில் கடந்து சென்றது. அப்போது கடைசி பெட்டியின் பார்சல் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. ஸ்டேஷனில் நின்றிருந்த கண்காணிப்பாளர் ராஜகோபால், இதை பார்த்து உடனடியாக இன்ஜின் டிரைவர் கோபாலுக்கு வயர்லெஸ் மூலம் தெரிவித்தார். கார்டுகளுக்கும் தகவல் பறந்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. டிரைவர் கோபால், உதவி டிரைவர் விஷ்ணு மற்றும் கார்டுகள் ஓடிவந்து பயணிகளை உஷார்படுத்தினர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள், அவசரம் அவசரமாக கீழே இறங்கினர். தீப்பிடித்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. மற்ற பெட்டிகள் சற்று தூரம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.

கடைசி பெட்டி முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் கிடைத்து பெருந்துறை, ஈரோடு, பவானியில் இருந்து 5 வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். பார்சல் பகுதியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஸ்டேஷன் கண்காணிப்பாளர் சரியான நேரத்தில் தீயை பார்த்து தகவல் தெரிவித்ததால், ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சேலம் கோட்ட மேலாளர் சுஜாதா சம்பவ இடத்தை பார்வையிட்டார். ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். சேலம் கோட்ட மேலாளர் சுஜாதா கூறுகையில், ‘‘தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள், கேஸ் அடுப்பு உதிரிபாகங்கள், புத்தகங்கள், மீன் பார்சல்கள் இருந்தன. இவை அனைத்தும் எரிந்துவிட்டன. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சேதமதிப்பு குறித்து ஆய்வுக்கு பிறகுதான் தெரியவரும்‘‘ என்றார். ரயில்கள் தாமதம் இந்த விபத்து காரணமாக ஈரோடு - கோவை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு வரவேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ், 5.20&க்கு வரவேண்டிய பெங்களூர் & கன்னியாகுமரி ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், 6.25-க்கு வரவேண்டிய மும்பை & கோவை குர்லா எக்ஸ்பிரஸ், 7.30க்கு வரவேண்டிய நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், திருச்சி பாசஞ்சர் ஆகியவை 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன. எதிர் டிராக்கில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

யுத்தத்தின் பின் யாழ். பிரதேசத்தின் அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியின் 258 ஆவது கிளை திறந்துவைப்பு!

Thursday, June 28, 2012
இலங்கை::யுத்தத்தின் பின் யாழ். பிரதேசத்தின் அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியின் 258 ஆவது கிளை யாழ். ஸ்டேன்லி வீதி இலக்கம் 85-87 இல் 2012 ஜூன் மாதம் 25 ஆம் திகதி கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கோசலா ஜயவர்தன பிரதேசம் முழுவதும் பரந்துள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களை நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்காளராக்குவதுடன் குடும்ப சேமிப்பு மற்றும் விசேடமாக பெண்களின் சேமிப்பு ஆர்வத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதுடன் திவி நேகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய வேலைத்திட்டமொன்றினை வங்கி மேற்கொள்ளவுள்ளது.

நாட்டின் பிரதான போஷனை தேவையான பால் உற்பத்தி தொடர்பாக பாரிய திட்டமொன்றினை யாழ் குடா நாட்டில் மேற்கொள்ள முடியும். மனை சார்ந்த பாற்பண்னைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் மற்றும் மனிதர்களின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் என்பன எமக்குள்ள சவால்களாகும். அச் சவால்களுக்கு சரியான முறையில் முகங்கொடுத்து 2016ஆம் ஆண்டில் இலங்கையினை பாலின் தன்னிறைவுள்ள நாடாக மாற்றும் தேசிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்வதற்கேற்ற எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இப் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் விவசாய துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் அதனால் அத்துறைகளை அபிவிருத்தி செய்து மீன்பிடித் தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையிலான சேவைகள் பிரதேச அபிவிருத்தி வங்கியால் இப்பிரதேசத்தி;ற்கு கிடைக்குமென தான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் ரத்னசிரி சிரிவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது வங்கின் கிளை வலையமைப்பினை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தில் யாழ். குடாநாட்டில் அடியெடுத்து வைப்பது எமக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகின்றோம்.

தேசிய வங்கியாக நாடு முழுவதினையும் உள்ளடக்கிய கிளை வலையமைப்பினை கொண்டுள்ள நாம் யாழ். குடாநாட்டில் எமது கிளையினை ஆரம்பிப்பதன் மூலம் எமது சகோதர மக்களின் நன்மைக்காக வேவையாற்ற கிடைத்துள்ளது. அத்துடன் இப்பிரதேசத்தின் வேகமான அபிவிருத்தி பாதையில் எமது பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க முடியுமென்பது எனது நம்பிக்கையாகும் என அவர் தெரிவித்தர்.

இத்திறப்பு விழாவில் வங்கியின் பிரதேச பொது முகாமையாளர்கள் பிரதிப் பொது முகாமையாளர்கள் முகாமையாளர்கள் உட்பட ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ராஜீவ் கொலையாளிகள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 10ல் இறுதி விசாரணை!

Thursday, June 28, 2012
வேலூர்::ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது என்று வக்கீல் சந்திரசேகர் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் உள்ளிட்ட 3 பேரையும் வக்கீல் சந்திரசேகர் நேற்று சந்தித்து பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், Ôமூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த வழக்கின் நிலவரம் மற்றும் வழக்கை கொண்டு செல்லும் விதம் குறித்து மூவருடன் பேசினேன். இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு ஜனாதிபதி மாளிகை செயலாளரிடம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் மூவரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையானார் சுர்ஜீத் சிங்!

Thursday, June 28, 2012
இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலை செய்யப்பட்டார்.30 வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலையாகியுள்ளார்.பாகிஸ்தானின் லாக்பாத் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட சுர்ஜீத் சிங் வாகா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்கு வர விருக்கிறார்.அவரை வரவேற்க அவரது குடும்பத்தினர் வாகா எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. இந்தியாவைச் சார்ந்த சுர்ஜீத் சிங்கை உளவு பார்த்த குற்றத்திற்காக பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தபோது சிங்யை விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு என்பது குறிப்பிடத்தக்கது...

சச்சா சிங் என்பவரின் மகனான சுர்ஜீத் சிங், கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி நடந்தபோது அங்கு உளவு பார்த்ததாக சுர்ஜித் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 1985ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின் பேரில், அதிபர் குலாம் இஷாக் கான் உத்தரவின் பேரில் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவரை தற்போது பாகிஸ்தான் விடுவிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

ஆனால் அறிவிப்பு வெளியிடுகையில் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்வதாக செய்திகள் வெளியாகின. இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டு உற்றார், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தனர். அவர்கள் தலையில் இடியை இறக்குவது போன்று சற்று நேரத்தில் சரப்ஜித் சிங் அல்ல சுர்ஜித் சிங்கை தான் விடுதலை செய்கிறோம். தவறாக சரப்ஜித் சிங் என்று அறிவித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இத்தனை பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங் இன்று காலை லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்காக காத்திருந்த அவரது உறவினர்கள் அவரைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

ஊடகவியலாளர்களை புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்கின்றனர் - குற்றம் சுமத்தும் ஊடக அமைப்புக்கள்!

Thursday, June 28, 2012
இலங்கை::இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல் தொடர்வதாக ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை சில தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஊடக சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் முக்கிய ஐந்து ஊடக அமைப்புக்கள் கொழும்பில் நேற்று நடத்திய ஊடவியலாளர் சந்திப்பின்போது அவற்றின் பிரதிநிதிகளும் ஊடவியலாளர்களும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஊடக அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்படாத இணையத்தளங்களை தடைசெய்வதற்கு தமக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பொன்றின் அடிப்படையில் இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் பதிவுசெய்யப்பட வேண்டியது கட்டாய சட்டமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் மறுத்துள்ளதாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்.பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது-யாழ். நீதவான்!

Thursday, June 28, 2012
இலங்கை::யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளை சரியானது என யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

கடந்த 18 ஆம் திகதி யாழில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது

இந்த வழக்கிற்கான தீர்ப்பை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராசா நேற்று வழங்கினார். அந்த தீர்ப்பு பின்வருமாறு:

"இவ்வழக்கின் பிரிவு 98(1) அதன் தொடர்ச்சியான பிரிவு 106(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதற்கான காரணங்களை மன்று மேலே சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஏற்கனவே இடப்பட்ட கட்டளையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை பிரிவு 101(1) இன் கீழ் எதிர்மனுதாரர் சாட்சியங்களை முன்வைத்திருக்க வேண்டும்

ஆனால் சட்ட முறைகளுக்கு அமைவாக இவ்விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. மேலும் இவ்வழக்கில் உள்ள பிரச்சனையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அனுகியிருக்க முடியும.; ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் மூன் சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும்.

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. அதை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலும் ஆர்பாட்டத்தை நடாத்துவதற்கு முனைந்துள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் வகையில் கட்டளையைக் கிழித் தெறிந்து ' நீதிமன்றக் கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்பம் இதுவாகும்' எனவும் கோஷமிடப்பட்டுள்ளதாக மன்று அறிகிறது.

அதன்மூலம் சட்டத்தினை கையில் எடுக்கும் வகையிலும் அதனுர்டாக மக்களை தவறாக வழிநடாத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக எதிர்மனுதாரர்களுக்காக ஆஜராகும் ஒரு சில சட்டத்தரணிகளும் இருந்துள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் மிரட்டல் விடும் வகையிலும் அமையும் என மன்று கருதுகிறது.

சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் சார்ந்த இவர்கள் இதனைக் கண்டிக்க முனையாததன் மூலம் அவர்களின் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பதுடன் இத்தகைய செயலுக்கு உரமூட்டுவதாவே அமைகிறது

மக்களின் அவலங்களில் மீது அரசியல் நடத்தி மீண்டும் இருண்ட யுகத்திற்கு மக்களை இட்டுச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது' ஜனநாயக மறுப்பையும் ஆயுதக்கலாச்சரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றுவதற்கான முயற்சியாகவே மன்று இதனைக் கருதுகின்றது.

மக்களை அரசியல் பகடைக்காய்களாக்கி அவலங்களில் மீது அரியனை ஏறும் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இனக்குரோதங்களைத் தூண்டி இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் இந்த மண்ணில் மேடைஏற்றுவதற்கான முயற்சியை மன்று எந்த வகையிலும் அனுமதிக்காது.

ஆகவே, மேற்கூறிய காரணங்களுக்காக அடிப்படை சட்ட முறையற்ற வகையில் செய்யப்பட்ட இவ்விண்ணப்பத்தை மன்று நிராகரிப்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மன்று உறுதி செய்கிறது.

வான் ஒன்றில் சிறுமியை கடத்த முயன்ற 11 சந்தேகநபர்கள் ஹட்டன் பகுதியில் கைது!

Thursday, June 28, 2012
இலங்கை::வான் ஒன்றில் சிறுமியை கடத்த முயன்ற 11 சந்தேகநபர்கள் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஹட்டன் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த அத தெரணவிடம் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் பயணித்த வானை பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இவர்கள் பயணித்த வானில் 16 வயது சிறுமி இருந்தது பொலிஸாரால் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

UN பிரதிநிதிகள் இலங்கைக்கு வரத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தாயார் - இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது!

Thursday, June 28, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரதிநிதிகள் இலங்கைக்கு வரத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தாயார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஆராய தமது பிரதிநிகளுக்கு இலங்கை வர வேண்டியுள்ளதாக நவநீதம்பிள்ளை கோரியுள்ளாரென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் ஒன்றை வெளிவிவகார அமைச்சு ஐநாவிடம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதன்படி, இலங்கைக்குள் அவர்களை அனுமதிக்க, வசதி செய்து கொடுக்க இலங்கை தயார் எனவும், விஜயம் செய்யவுள்ளவர்களின் விபரம், அவர்களின் நோக்கம் என்பவை குறித்து வெளிவிவகார அமைச்சு ஐநா மனித உரிமை கவுன்ஸிலிடம் தகவல் கோரியுள்ளது.

அது குறித்த தகவல் கிடைத்ததும் ஐநா பிரதிநிகள் இலங்கைக்கு வருவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடா, சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளைதுரிதப்படுத்த தீர்மானித்துள்ளது!

Thursday, June 28, 2012
கனடா, சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளைதுரிதப்படுத்த தீர்மானித்துள்ளது.

சன் சீ கப்பல் ஊடாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள ;கனடாவிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு கனேடியர்களும், நான்கு இலங்கையர்களும் இவ்வாறுகுற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளஆறு பேருக்கு எதிரான விசாரணைகளையும் துரிதப்படுத்த அந்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஒரு மில்லியன் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படக் கூடும்என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் ஆர்வம் மற்றும் அரசியல் விவகாரம் ஆகியவற்றின் காரணமாகவழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2010ம் ஆண்டு எம்.வீ. சன் சீ கப்பலின் ஊடாக 492 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவைச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல்: நேருக்கு நேர் மோத பிரணாப் - சங்மா தயார்!

Thursday, June 28, 2012
சென்னை::ஜனாதிபதி தேர்தலில், நேருக்கு நேர் போட்டியிடும், பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் தத்தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்கின்றனர். பிரதமர் சோனியா உள்ளிட்டோர் கையெழுத்திட்ட மனு, பிரணாப் முகர்ஜிக்காக தயாராகிவிட்ட நிலையில், அ.தி.மு.க., - பிஜு ஜனதாதளம் - பா.ஜ., எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட வேட்பு மனு, சங்மாவுக்காக தயாராகியுள்ளது. எதிரெதிர் துருவங்களாக களத்தில் இறங்கும் இருவருமே, இன்று, பார்லிமென்டிற்கு வந்து, ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆதரவு திரட்டுவதில் தீவிரம்: ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள், தலைநகர் டில்லியில், ஜரூராக நடைபெறத் துவங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவரும், நிச்சயமாக வெற்றி பெறப்போகிறவர் என்ற எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவருமான பிரணாப் முகர்ஜி, தனது நிதியமைச்சர் பதவியை, ராஜினாமா செய்துள்ளார். எதிர்தரப்பில் உள்ள சங்மாவும், தனது முயற்சிகளில் சற்றும் சளைத்து விடாமல், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், ஏற்கனவே துவங்கி விட்டிருந்தாலும், பிரதான வேட்பாளர்களான பிரணாப்பும், சங்மாவும் எப்போது மனுத் தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பிரமாண்டம்: இந்நிலையில், இருதரப்புமே தங்களது வேட்பு மனுத்தாக்கல் வைபவத்தை, சாதாரணமாக வைத்து விடாமல், சற்றே முக்கியத்துவமும் பிரமாண்டமாகவும் செய்திட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இவர்கள் இருவருக்குமே, அவரவர் தரப்பு ஆதரவு எம்.பி.,க்கள் - எம்.எல். ஏ.,க்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

ஆதரவு கையெழுத்து: பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நான்கு பாகங்களாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என 100 பேர் கையெழுத்திட்டு, மொத்தம் 400 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இவரது வேட்பு மனுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், முலாயம் சிங், கருணாநிதி, ராம்விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும், மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி கையெழுத்திட்டு, தயார் நிலையில் உள்ளது. நேற்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகத்தில், இந்த மனுவின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்றன. அப்போது, பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற வகையில் ஞானதேசிகன் கையெழுத்திட்டார். மேலும் அழகிரி, கிருஷ்ணசாமி, விஸ்வநாதன் உள்ளிட்ட எம்.பி.,க்களும் கையெழுத்திட்டனர். தனது வேட்பு மனுவை பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கான பொறுப்பு அதிகாரியும், ராஜ்யசபா செயலருமான அக்னி கோத்ரியிடம் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்யும் வைபவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் ஆதரவு கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கவுள்ளார்.

உடன் நவீன் வருகை: ஆளும் கூட்டணி வேட்பாளர் பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான இன்றைக்கே எதிர்க்கூட்டணி வேட்பாளரான சங்மாவும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். காலை 11 மணி வாக்கில் பிரணாப் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதால், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்ற பிறகு, நண்பகல் 12 மணிக்குமேல் தனது வேட்பு மனுவை சங்மா தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெறுகின்றன. சங்மாவுடன், நவீன் பட்நாயக் வருகிறார். சங்மாவின் மனுவை முன்மொழிந்து நேற்று முன்தினம் நவீன் பட்நாயக் கையெழுத்திட்டார். சங்மாவை ஆதரிக்கும் முக்கிய கட்சிகளான பிஜு ஜனதாதளம், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இவரது வேட்பு மனுவை தயாரிக்கும் பணியில் உள்ளனர். இரு தினங்களுக்கு முன், கவுகாத்தியில் பிஜு ஜனதாதள எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் அவர்களது கையெழுத்துகள் பெறப்பட்டன. அ.தி.மு.க., சார்பில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகளை பெறும் பணி தம்பிதுரையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் அனைவரது கையெழுத்துகளையும் பெற்று, வேட்பு மனுவை தயார் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். பா.ஜ., சார்பில் கடைசி கட்டமாக அனைத்து கையெழுத்துகளும் பெற்று, இன்று காலை இறுதி வடிவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

35 பேர் மனு: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட இதுவரை 35 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இலியாஸ் என்பவரின் மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது. தவிர, மேட்டூரைச் சேர்ந்த டாக்டர் பத்மராஜன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கோவணம் தங்கவேலு ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். போதிய எண்ணிக்கையிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சான்றிதழை இருவருமே அளிக்கவில்லை. எனவே, இவர்களின் மனுக்கள் வரும் 2ம் தேதி அன்று வேட்பு மனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும் என, பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாக்., முழு ஆதரவுடன் மும்பை தாக்குதல்: சிதம்பரம் குற்றச்சாட்டு!

Thursday, June 28, 2012
திருவனந்தபுரம்::மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபு ஜுண்டால் அளித்த வாக்குமூலத்தின் மூலம், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உள்ளது தெளிவாக தெரிய வந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று திருவனந்தபுரத்துக்கு வந்தார். அப்போது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அபு ஜுண்டால் தெரிவித்த வாக்குமூலம் குறித்தும் பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டி:

பாக்.,கிற்கு தொடர்பு: மும்பையில், கடந்த 2008ல் நடந்த, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக, எப்போதும் நாங்கள் கூறி வந்துள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள, அபு ஜுண்டால் அளித்த வாக்குமூலம், நாங்கள் கூறியதை உறுதி செய்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது, ஜுண்டால் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. இதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதும், கை காட்ட விரும்பவில்லை. ஆனால், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது மட்டும் உறுதி. கராச்சியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்ததாக, ஜுண்டால் வாக்குமூலம் அளித்துள்ளது, அரசு சார்ந்த அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உள்ளதை உறுதி செய்துள்ளது. ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர் என்ற எங்களின் குற்றச்சாட்டை, அந்த நாடு, தொடர்ந்து நிராகரித்து வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில், இந்தியாவின் அணுகுமுறையை உலக நாடுகள் அங்கீகரித்து வரும் நிலையில், பாக்., அரசு மறுத்து வருகிறது.

ரகசியம்: தற்போது கைது செய்யப்பட்டுள்ள அபு ஜுண்டாலின் நடவடிக்கைகளை, கடந்த ஒரு ஆண்டாகவே, இந்தியாவின் விசாரணை அமைப்புகள் கண்காணித்து வந்தன. இந்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அபு ஜுண்டால் யார் என்பதும் எங்களுக்கு முன்பே தெரியும். தொடர்ந்து கடும் முயற்சி மேற்கொண்டு, தற்போது ஜுண்டாலை கைது செய்துள்ளோம். ஜுண்டால் குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். ஆனால், நாங்கள் ஏற்கனவே கொடுத்த பட்டியலில் உள்ளவர்களின் குரல் மாதிரிகளை கொடுப்பதாக, அளித்திருந்த வாக்குறுதியை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும். ஜுண்டால் விவகாரம் குறித்த விசாரணை தகவல்களை, தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரின் பெயர்களையும், தாக்குதல் நடந்தபோது, கராச்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களையும், ஜுண்டால் அடையாளம் காட்டியுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாவூத் எங்கே? மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, கைது செய்ய முடியும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாகவே, நாங்கள் கருதுகிறோம். ஆனால், இதையும் பாக்., அரசு மறுக்கிறது. மும்பை தாக்குதலுக்கு காரணமான அனைத்து நபர்களையும், ஒப்படைக்க வேண்டும் என, பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கைது செய்து, விசாரிக்க வேண்டும் என்பது தான், எங்களின் விருப்பம்.

சரப்ஜித் சிங் குழப்பம்: ஜுண்டால் கைதுக்கும், சரப்ஜித் சிங் விடுதலை தொடர்பாக நிகழ்ந்த குளறுபடிக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை. அங்குள்ள (பாகிஸ்தான்) சில பிரச்னைகளால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண்டும் என, பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது, இடதுசாரி தீவிரவாதம் தான். 70 சதவீத இடதுசாரி தீவிரவாத வன்முறைகள், நாட்டின் மத்திய பகுதிகளில் உள்ள 26 மாவட்டங்களில் நடந்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது. கேரளா, பயங்கரவாதிகளின் சொர்க்கமாக விளங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. இங்குள்ள ஒரு சில அமைப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த அமைப்புகள், வரம்பு மீறும்போது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

வடமத்திய மாகாண சபையை கலைக்க தீர்மானம்!

Thursday, June 28, 2012
இலங்கை::வடமத்திய மாகாண சபையை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆளுனர் கருணாரத்ன திவுல்னே தெரிவிக்கின்றார்.

வட மத்திய மாகாண சபையை கலைக்கும் உத்தரவில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக மாகாண ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வடமத்திய மாகாண ஆளுனர் மேலும் கூறினார்...

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் நேற்று கலைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாகாண சபைகள் கலைக் கப்படுவது தொடர்பில் மூன்று மாகா ணங்களினதும் முதலமைச்சர்கள் அந் தந்த மாகாண ஆளுனர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறி வித்துள்ளதையடுத்து உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் சம்பந்தப்பட்ட ஆளுனர்கள் கையொ ப்பமிட்டுள்ளனர்.

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அந்த மாகாண சபைகளைக் கலைப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவின. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைகள் சட்டங்களுக்கிணங்க மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒருவாரங்கள் நிறைவடைந்ததும் தேர்தல் கள் ஆணையாளர் அடுத்த தேர்தலுக்கான வேட்பு மனு திகதியை அறிவிப்பார். இதற்கிணங்க ஒரு வார காலத்திற்குள் இத்தீர்மானம் அறிவிக்கப்படும்.

எனினும் இதற்கான திகதி இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லையென தேர்தல் செயலகம் நேற்று அறிவித்தது. இதே வேளை பெரும்பாலும் செப்டம்பர் முதற் பகுதியில் கலைக்கப்பட்ட மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமென தெரிய வருகிறது.

போனஸ் ஆசனங்கள் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கும் 114 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்களும் வட மத்திய மாகாண சபைக்கு 33 உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 44 உறுப் பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 15 பேரும் மக்கள் விடுதலை முன்னணியில் ஒருவரும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியில் ஒருவருமென மொத்தம்37 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

வட மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 12 பேரும் ஜே. வி.பி. யில் ஒருவருமென மொத்தம் 33 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 25 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் 17 பேர், மக்கள் விடுதலை முன்னணியில் 2 பேர், என மொத்தம் 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டி ருந்தனர். நேற்றைய தினம் மாகாண சபைகள் மூன்றும் கலைக்கப்பட்டதை யடுத்து வரும் தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் உடனடியாகவே தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதை அறிய முடிந்தது.

மனித உரிமை செயற்திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக UN இலங்கை நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்!

Thursday, June 28, 2012
இலங்கை::மனித உரிமை செயற்திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இன்றி தொடர்ச்சியான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடானது காயங்களை பெரிதுபடுத்துமே தவிர, ஆக்கபூர்வமான தீர்வுகளை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

95 வீதமான இடம்பெயர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

Wednesday, June 27, 2012

நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்த சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை!

Wednesday,June 27, 2012
இலங்கை::நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி சிவாஜிலிங்கத்துக்கு மன்றுக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றக் கட்டளையை கிழித்தெறிந்து, நீதிமன்ற கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவரது செயற்பாடும் கருத்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விவத்தில் அமைந்துள்ளது என்று தெரிவித்தே யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

சுற்றுலா விசாவில் வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் புத்தளம் - அநுராதபுரம் வீதி ரயில் கடவைக்கு முன்னால் கைது!

Wednesday,June 27, 2012
இலங்கை::சுற்றுலா விசாவில் வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் புத்தளம் - அநுராதபுரம் வீதி ரயில் கடவைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாரால் இன்று காலை 11 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் புத்தூர் - காரைக்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம் 21 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம் 21 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு ஊழல் மோசடி விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பதில் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சுஜீவ மெதவத்த – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி பொலிஸ் அதிகாரிகளால் கப்பமாகப் பெறப்பட்ட 21 இலட்சம் ரூபாவும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்...

பிரித்தானியப் பெண்ணொருவர் செல்லுபடியாகக்கூடிய விஸா மற்றும் கடவுச்சீட்டு அற்ற நிலையில் கண்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

வட பகுதியில் புதிதாக படை முகாம்கள் அமைக்கப்படவில்லை - பிரிகேடியர் ரவி பிரிய!



Wednesday,June 27, 2012
இலங்கை::வட பகுதியில் புதிதாக படை முகாம்கள் அமைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின், மாதகல் பகுதியில் கடற்படையினர் புதிதாக முகாமொன்றை நிர்மாணித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறித்து பதிலளிக்கையில் பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி பிரிய இதனைக் குறிப்பிட்டார்.

காரைநகர் பகுதியில் ஏற்கனவே படை முகாமொன்று இருக்கும் நிலையில், அதனை அண்மித்த பகுதியில் மற்றுமொரு முகாமினை அமைப்பதற்கு என்ன தேவை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருந்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் வட பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள் படைமுகாம்கள் அரச காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பது பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ரவி பிரிய மேலும் தெரிவித்தார்.

தனியாருக்கு சொந்தமான காணிகளில் படைமுகாம்கள் அமைக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tuesday, June 26, 2012

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தனிநாட்டு கொள்கையில் இருக்கிறது அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது- அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Tuesday, June 26, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தனிநாட்டு கொள்கையில் இருக்கிறது அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது- அடிப்படை உரிமை மனு தாக்கல்!

தமிழ்த் தேசியக் (புலிகூட்டமைப்பு தனிநாடு என்ற கொள்கையில் இருப்பதாகவும் அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது எனக் கூறி, அடிப்படை உரிமை மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கள ஜாதிக பெரமுன என்ற கட்சியின் ஜயந்த லியனகே என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி 10 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.