![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtjz4Vu8NOE-y6GYDafndplVUMB2m9fjWTQ03nh7f5K0oh1W96V1jLc1S8PMEIPOqOh06oPVR-z4C31SaqfV0MDdhCyGViX6lbKaM2DVhIjCEolNs5ZxInQj15OaJwZQCXtye2UashhcFV/s320/UN-SL-FLAG.bmp)
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரதிநிதிகள் இலங்கைக்கு வரத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தாயார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஆராய தமது பிரதிநிகளுக்கு இலங்கை வர வேண்டியுள்ளதாக நவநீதம்பிள்ளை கோரியுள்ளாரென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் ஒன்றை வெளிவிவகார அமைச்சு ஐநாவிடம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அதன்படி, இலங்கைக்குள் அவர்களை அனுமதிக்க, வசதி செய்து கொடுக்க இலங்கை தயார் எனவும், விஜயம் செய்யவுள்ளவர்களின் விபரம், அவர்களின் நோக்கம் என்பவை குறித்து வெளிவிவகார அமைச்சு ஐநா மனித உரிமை கவுன்ஸிலிடம் தகவல் கோரியுள்ளது.
அது குறித்த தகவல் கிடைத்ததும் ஐநா பிரதிநிகள் இலங்கைக்கு வருவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment