Wednesday, May 2, 2012

ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல்!

Wednesday,May,02,2012
காபூல்::அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினத்தில் ஆப்கானில் குண்டு வெடிப்பு நிகழ்‌ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார். இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஒபாமா திடீர் பயணம் : அல்குவைதா இ‌யக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதன் முன்னாள் தலைவர் பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவ் வியக்கத்தினரால் அனுஷரிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான் சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து நிதியுதவி , மற்றும் படைகளை படிப்படியாக குறைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ‌தொடர்ந்த அமெரிக்க ராணுவத்தினரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என கூறினார்.

உளவுத்துறை எச்சரிக்கை : அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கானிஸ்தானின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தீவிரவாதிகள் தாக்குதல் : அதிபர் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு தாக்குதல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்ற நிலையில் மேற்கு பகுதியில் குடியிருப்பு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்‌ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 6 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என தலைமை போலீசார் அயூப் சாலங்கி தெரிவித்தார்...

அல்கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவர் பயணத்தை முடித்து சென்றதும் தலைநகர் காபூலில் குண்டுகள் வெடித்து 6 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கய்தா தீவிரவாதி இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த ஆண்டு மே 2,ம் தேதி அமெரிக்க சிறப்பு படையினர் ரகசிய தாக்குதல் நடத்தி கொன்றனர். அவர் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நள்ளிரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அங்கு அதிபர் கர்சாய் மற்றும் அமெரிக்க படையினரை சந்தித்தார். பக்ராம் விமான தளத்தில் நேட்டோ வீரர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, ஆப்கனில் தலிபான் செயல்பாடுகளை அமெரிக்கா தகர்த்துள்ளது.

அல்கய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 20 பேர் வரை அழிக்கப்பட்டுள்ளனர். ஆப்கன் பாதுகாப்பு படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என இலக்கு கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது. 2014ல் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆப்கன் வீரர்கள்தான் பொறுப்பு. சர்வதேச படைகள் அவர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கும். தேவைப்படும்போது அவர்கள் பக்கம் இருந்து போராடும் என்றார். இந்த திடீர் பயணத்தை முடித்துக் கொண்டு ஒபாமா கிளம்பியதும், தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் 3 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடும் நடத்தினர். தலிபான் இயக்கம் இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் 6 பேர் பலியானதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆப்கனில் உள்ள அமெரிக்க தூதரகம் உஷார்படுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment