Wednesday, May 2, 2012

வலிமையான லோக்பால் விவகாரம் : விழிப்புணர்வு பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார் ஹசாரே!

Wednesday,May,02,2012
சென்னை::வலிமையான லோக்பாலை நிறைவேற்ற கோரியும் குற்ற பின்னணி உள்ள அரசியல்வாதிகளை விசாரிக்க கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் மெரினா கடற்கரையில் நேற்று மனித சங்கிலி நடந்தது. இயங்க ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசைன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், நிருபர்களி டம் ஜாகீர் உசைன் கூறிய தாவது: வலிமையான ஜன் லோக்பாலை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஒன்றரை மாத விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு ஹசாரே வருகிறார். அவரது பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment