Wednesday, May 2, 2012

புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றமைக்காக மற்றொருவரையும் கனடாவை விட்டு வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

Wednesday,May,02,2012
கனடா::சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த மேலும் இருவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆட்களை கப்பல் மூலம் கடத்துவதில் தொடர்புபட்டிருந்ததற்காக ஒருவரையும், புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றமைக்காக மற்றொருவரையும் கனடாவை விட்டு வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த 492 அகதிகளில் இதுவரை 19பேர் கனடாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இருவரினதும் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவர்களில் ஒருவர் 2005 - 2006 காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்றும், 39 வயதான மற்றவர் ஆட்கடத்தல்களுக்கு உதவியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment