Wednesday,May,02,2012
இலங்கை::(புலி)கூட்டமைப்புப் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உண்மை தெளிவுபடுத்தியதில்தான் ஜெனீவா தீர்மானத்தில் நாம் வெற்றி கொண்டோம்-சித்தார்த்தன்:-
எமது அரசியல் உரிமை பெற நாம் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயனற்றுப் போய்விட்டது. இனி எமது இன ஒற்றுமையை எமது உரிமைகளை பெற வழி சமைக்க வேண்டும் என்று (புளொட்) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.
மே தினத்தை முன்னிட்டு மன்னாரில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின ஒன்றியம் மன்னார் நகர சபை மண்டபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நேற்று ஒழுங்கு செய்திருந்தது.
இக்கூட்டத்தில் புளொட் இயக்கத் தலைவர் த. சித்தார்த்தன் கலந்து கொண்டு தொடர்ந்து பேசுகையில், உலகம் பூராகவும் இன்று தொழிலாளர் தினம் வெகு விமரிசையாக நினைவு கூரப்படுகின்றது.
எமது நாட்டிலும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்களும் செயற்பட்டவர்களும் பலர் உள்ளனர். அத்துடன அரசியல் கட்சிகளிலிருந்தும் எமது தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக சேவையாற்றியவர்களும் உள்ளனர்.
வடக்கைப் பொறுத்தமட்டில் தொழிற்கட்சி ஒன்றும் இல்லையென தோன்றுகின்றது. ஆனால் எமது மீனவ சமூகமும் விவசாய சமூகமும் ஒன்றுபட்டு தொழிற் கட்சியாக இருந்து செயல்பட வேண்டும். தமிழர்கள் நாம் பல உரிமைகளை இழந்தபோது தமிழ்த் தேசியம் எனற போர்வையில் நாம் ஒன்றுபட்டு செயற்பட்டோம். இன்று யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து மே தினத்தைக் கொண்டாடுகின்றது. இது இன்று சரியா பிழையா என்ற வாதமும் பிரதிவாதமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எதிலும் அரசியல் கலந்துள்ளது. எந்த தொழிற்சங்கமும் ஓர் அரசியல் கட்சியில்தான் தங்கியுள்ளது. ஆனால் தமிழ் மக்களாகிய நாம் எமது ஒற்றுமையை கட்டிக் காத்து இதன் மூலம் எமது உரிமைகளுக்காக செயல்படும்போது வெற்றி கொள்வோம்.
எமது உரிமையைப் பெற நாம் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் முற்று முழுதாகப் பயனற்றுப் போய்விட்டது. ஆனால் எமது இன ஒற்றுமையே எதிர்காலத்தில் வெற்றி வாய்ப்பைத் தரக்கூடியதொன்றாக இருக்கின்றது.
எமது கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உண்மை நிலையை ஒன்றுபட்டுத் தெளிவுபடுத்தியதில்தான் ஜெனீவா தீர்மானத்தில் நாம் வெற்றி கொண்டோம்.
நாம் அரசியல் உரிமையைப் பெறத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இதற்கு ஆயுதப் போராட்டம் இனி சாத்தியம் இல்லை.
நடந்த முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது எமது இனத்தின் ஒற்றுமையைப் பற்றிப் பலரும் எம்மிடம் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து எமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.
இதன் பலாபலன்தான் நாம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று எமது இன ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளோம். இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment