Wednesday, May 2, 2012

ஹெலிகாப்டர் நொறுங்கி 13 பேர் பலி!

Wednesday,May,02,2012
போகோட்டா::கொலம்பிய நாட்டு விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர், 7 ராணுவ வீரர்கள் மற்றும் 6 போலீசாருடன் பாரன்குய்லா நகரில் இருந்து காகேஷியாவுக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. கரீபியன் கடல் பகுதி அருகே சென்றபோது, ஹெலிகாப்டரில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, தாறுமாறாக பறந்த ஹெலிகாப்டர் சபனாகிராண்ட் நகரில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 13 பேரும் இறந்ததாக விமானப் படை தெரிவித்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்கு கொலம்பிய அதிபர் ஜூவான் மேனுவல் சான்டோ வருத்தம் தெரிவித்துள்ளார். இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அவர் டிவிட்டர் இணைய தளத்தில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment