Wednesday,May,02,2012
புதுடெல்லி::பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ், பா.ஜ. கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிப்பர். மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு மாநிலத்தின் எம்எல்ஏவுக்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது. அனைத்து மாநில எம்எல்ஏக்களின் மொத்த மதிப்பு, நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்களின் மதிப்புக்கு சமமாகும். இதில் 40 சதவீதம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது. 30 சதவீதத்துக்கும் குறைவாகவே பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது. அதிமுக, இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், மதசார்பாற்ற ஜனதா தளம் போன்ற இதர கட்சிகள் வசம் 30 சதவீத வாக்குகள் உள்ளன.
பா.ஜ. தரப்பில் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியாது என்பதால், காங்கிரஸ் வேட்பாளருக்கு நெருக்கடி கொடுப்பது என்ற நிலையை அந்தக் கட்சி எடுத்துள்ளது. காங்கிரசும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தரப்பில் துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினர். திமுக தலைவர் கருணாநிதியை சோனியாவின் தூதர் ஏ.கே.அந்தோணி சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாளை அல்லது அதற்கு மறுநாள் மம்தா பானர்ஜியிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பா.ஜ. கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க கூட்டணி தலைவர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என பா.ஜ. அறிவித்துள்ளது. இதற்கிடையே, துணை ஜனாதிபதி அன்சாரிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதில் பிரச்னை இல்லை என இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளன. அன்சாரி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதில் சமாஜ்வாடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. இதில் அன்சாரிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment