Wednesday, May 2, 2012

யாழ் நூலகத்திற்கு தீவைத்ததுடன், கறுப்பு ஜூலையினை ஏற்படுத்திய UNPயுடன் மேதினத்தைக் நடத்தும் TNA - அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Wednesday,May,02,2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து தொழிலாளர் தின ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடத்தும் கூட்டமைப்பின் நிலை குறித்து தான் கவலையடைவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கினிகெத்ஹேனையில் நடைபெற்ற தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச ;செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கினிகெத்ஹேனையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையின் பொருளாதார அபிவிருத்திற்கு தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.

தோட்டத்தொழிலாளர்களின் பங்களிப்பினாலேயே இலங்கை இவ்வாறான பொருளாதார அபிவிருத்தியை எட்டமுடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியானது கொழும்பில் மேதினத்தினை நடத்த முடியாது யாழ்ப்பாணத்தில் நடத்துவதாகவும், இதற்கான சுதந்திரத்தினை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனாலும் இதே ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் கடந்த காலங்களில் யாழ் பொது நூலகத்திற்கு தீ வைத்தனர் என்பதைனையும், ஐக்கிய தேசியக் கட்சியனரினால்தான் கறுப்பு ஜூலை என்ற கசப்பான நிகழ்வு இடம்பெற்றது என்பதனையும் கூட்டமைப்பினர் மறந்து அவர்களுடன் ஒன்றினைந்து வெட்கமில்லாமல் இந்த மேதினக் கூட்டத்தை நடத்துமளவிற்கு தாழ்த்தப்பட்டுவிட்டனர் என நினைக்கும் போது தான் மனவேதனையடைவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment