Wednesday, May 2, 2012

புலிகளின் முக்கிய சந்தேக நபர்கள் 3 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

Wednesday,May,02,2012
இலங்கை::போர் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட புலிகளின் முக்கிய சந்தேக நபர்கள் மூன்று பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் விடுதலைப்புலிகளின் உத்தரவின் பேரில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து, பாதுகாப்பு படையினருக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை திரட்டி அதனை புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்த வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சந்தேக நபர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

No comments:

Post a Comment