Wednesday, May 2, 2012

புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதி பதுமன் தொடர் விளக்க மறியலில்!

Wednesday,May,02,2012
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவரான பதுமன் எனும் சிவசுப்பிரமணியம் வரதானந்தனை இராணுவ முகாம்களை தாக்கியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்ய முயன்றமை ஆகிய குறுறச்சாட்டிகளின் காரணமாக மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல்நீதிமன்ற பதில் நீதிபதி எம். இளஞ்செழியன் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை விடுத்தார்.

பதுமன் சார்பில் வழக்குரைஞர் எவரும் ஆஜராகவில்லை. அவரை மே 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment