Tuesday, May 29, 2012

நவநீதம்பிள்ளை வெளிவிவகார அமைச்சின் ஊடாக பயண அட்டவணையை தயாரித்த பின்னரே இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் - கருணாதிலக்க அமுனுகம!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை மேற்கொண்டு பயண அட்டவணையை தயாரித்த பின்னரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் வெளிவரும் தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு வருமாறு வெகு காலத்துக்கு முன்னர் இலங்கையினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலைமையில் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வரவேண்டுமாயின் அது தொடர்பான முறைமைகளை பின்பற்றியே வரவேண்டும்.

நவநீதம் பிள்ளை எப்போது இலங்கைக்கு வருகை தருவார் என தற்போதைய நிலைமையில் கூற முடியாது. எனினும் அவர் இலங்கை வரவேண்டுமாயின் எமது வெளிவிவகார அமைச்சின் ஊடாக செயற் பாடுகளை பின்பற்றி பயண அட்டவணை யை தயாரித்துக் கொண்டே வர முடியும்.

ஆனால் அது எப்போது நடக்கும் என எம்மால் கூற முடியாது. விரைவிலும் நடை பெறலாம். இல்லாவிடின் 10 வருடங்களின் பின்னரும் நடக்கலாம் என அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment