Tuesday, May 29, 2012

சுவிஸர்லாந்தில் 90 வீத தொலைபேசி - தொலைபேசி அட்டை விற்பனை நிலையங்கள் புலிகளுக்குக்கு சொந்தமானவை - சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இயங்கும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள் மற்றும் தொலைபேசி அட்டை விற்பனை நிலையங்களில் 90 வீதமானவை புலிகள் அமைப்புக்கு சொந்தமானவை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் அண்மையில் ஜெனிவாவுக்கு சென்றிருந்த போது, இது குறித்து அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் அனைவரும் இந்த கடைகளிலேயே கையடக்க தொலைபேசிகளையும், தொலைபேசி அட்டைகளையும் கொள்வனவு செய்திருந்தனர். அறிந்தோ அறியாமலோ இவர்கள் புலிகள் அமைப்புக்கு நிதியை வழங்கியுள்ளனர்.

ஜெனிவா செல்லும் எவராக இருந்தாலும் அங்கு தொலைபேசியை மற்றும் தொலைபேசி அட்டைகளை கொள்வனவு செய்தாக வேண்டும். அவை விற்பனை செய்யப்படும் கடைகள் புலிகளுக்கு சொந்தமானவை என்பதால், தான் தொலைபேசியை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், ஜெனிவா செல்லும் இலங்கையர்கள் இதனை அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜெனிவாவில் தொலைபேசிகளையோ, தொலைபேசி அட்டைகளையோ கொள்வனவு செய்வதானது, புலிகள் அமைப்பு உதவுவதாகும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment