Wednesday,May,30,2012
இலங்கை::நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் சர்வதேச சக்திகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.சர்வதேச சக்திகள் பல்வேறு வழிகளில் நாட்டின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. இவற்றை முதலில் நாம் அடையாளம் காணப் பழகிக்கொள்ள வேண்டும்.
சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும். முழு உலகமும் இலங்கை பாதுகாப்புப் படை பற்றி இன்று அறிந்துள்ளது.
புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் உலகம் முழுவதிலும் இலங்கைப் படையினர் பற்றிய தகவல்கள் பிரபலமாகியுள்ளன.
பயங்கரவாத போரை இல்லாதொழித்த படையினர் தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment