Wednesday, May 30, 2012

லியாம் பொக்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்ற விரைவில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளது

Wednesday,May,30,2012
இலங்கை::லியாம் பொக்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்ற விரைவில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை குறிப்பாக, வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கண்காணிக்க உள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரி;த்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்கவும் தாமும் இந்த அழைப்பை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment