Wednesday,May,30,2012
சென்னை::சென்னை அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற பெங்களூரைச் சேர்ந்த போலி கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த வாசிம் அகமத் (41) தனக்கும், தனது மனைவி ஷீலாவுக்கும் விசா கோரி சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். நேற்று காலையில் அவர்கள் இருவரும் நேர்காணலுக்காக தூதரகத்துக் அழைக்கப்பட்டிருந்தனர்.
நேர்காணலின்போது, அவர்கள் இருவரும் உண்மையான கணவன்- மனைவி இல்லை என்பது தெரியவந்தது.
அமெரிக்க விசா பெறுவதற்காக அவர்கள் கணவன்- மனைவி போல நாடகமாடியுள்ளனர். அதற்காக போலியான ஆவணங்களையும் தயாரித்துள்ளனர்.
வாசிம் அகமத் பெங்களூரில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவியாக நடித்த ஷீலா (32) குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அமீன் என்ற புரோக்கர் சொன்னடி இப்படி விசாவுக்காக நாடகமாடியதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், ராயப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

No comments:
Post a Comment