Wednesday, May 30, 2012

முல்லைத்தீவு, மூதூர் மற்றும் ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!

Wednesday,May,30,2012
இலங்கை::முல்லைத்தீவு, மூதூர் மற்றும் ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பாதிகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு - வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது அடையாளம் காணப்படாத ஆயுதங்களின் பாகங்கள், கைக்குண்டுகள் உள்ளிட்ட மேலும் பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவபுரம் பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது கிளைமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஆயித்தியமலை உன்னிச்சை வாவியின் பாலம் ஒன்றிற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட மேலும் ஒரு தொகை ஆயுதங்களின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், மூதூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேறகொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மைன் டிடெக்டர் இயந்திரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment