Wednesday,May,30,2012
சென்னை::இலங்கை அரசு சார்பாக ஜூன் 1-ம் தேதி கொழும்பில் பாரதியார் விழா நடத்தப்படுகிறது. ’தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பாரதியார் சங்கக் குழுவினர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.
கொழும்பில் நடைபெறும் விழாவில் பாரதியார் சங்க குழுவினர் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ்க் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவது உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர். மதிமுக பொது செயலாளர் வைகோவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் ஆர்வர்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி பாரதியார் சங்க குழுவினர் இலங்கை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment