Wednesday, May 2, 2012

கருணாநிதி தனி ஈழம் கேட்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை: (புலி கோமாளி) வைகோ தாக்கு!

Wednesday,May,02,2012
சென்னை::திமுக தலைவர் கருணாநிதி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்று மதிமுக பொதுச் செயலாளர் (புலி கோமாளி) வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்திய அரசின் துணையுடனேயே இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தது. அப்போது முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தன் கடைமையைச் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தனது உயிரை மாயத்துக் கொண்டபோது அவர் ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உயிருக்கு போராடியபோது அவரை இறங்கக் கூட விடாமல் சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டதற்கு கருணாநிதியே காரணம்.

இவ்வாறெல்லாம் செய்துவிட்டு தற்போது மட்டும் தமிழ் ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். முப்படைகளைக் கொண்ட தமிழ் ஈழத்தை அப்போதே பிரபாகரன் உருவாக்கியிருந்தார். உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டியது தான் மீதமிருந்தது. அப்போது அதை மத்திய அரசின் துணையோடு அழித்துவிட்டு தனி ஈழம் அமைக்கப்போவதாக கருணாநிதி கூறவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்றார் (புலி கோமாளி) வைகோ.

No comments:

Post a Comment