Monday, May 28, 2012

இலங்கை கப்பல் தென்னாபிரிக்கா வசம்!

Monday, ,May, 28, 2012
இலங்கை::இலங்கைக்குச் சொந்தமான மஹபொல என்ற கப்பல் தென் ஆபிரிக்காவில் சர்வதேச போக்குவரத்து சம்மேளனத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

25 ஊழியர்களுடன் கடந்த 17 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குறித்த கப்பல் தற்போது தென் ஆபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் இணைப்பதிகாரி சுனில் ஒபடகே தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்தக் கப்பல் தனியார் நிறுவனமொன்றிற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தனியார் நிறுவனத்தினால் ஊழியர்களுக்கான சம்பளம் உரியமுறையில் வழங்கப்படாமை கப்பல் கைப்பற்றப்பட்டமைக்கு காரணம் என சுனில் ஒபடகே குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் தென் ஆபிரிக்காவிற்கு சென்றுள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் இணைப்பதிகாரி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment