Monday, May 28, 2012

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி மர்மச்சாவு:குளியல் அறையில் பிணமாக கிடந்தார்!

Monday, ,May, 28, 2012
சென்னை::சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி ஒருவர் குளியல் அறையில் பிணமாக கிடந்தார்.

இலங்கை பயணி

இலங்கையை சேர்ந்தவர் லால்சிங் பரசுராம் (வயது 55). இவர், கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் இலங்கை செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் எடுத்து இருந்தார். பின்னர், விமான நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் சென்று தங்கினார்.

மர்மச்சாவு

இதையடுத்து, லால்சிங் பரசுராம் கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த விமான நிலைய ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு அவர் பிணமாக கிடந்தார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் விரைந்து சென்று லால்சிங் பரசுராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

லால்சிங் பரசுராம் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment