Monday, ,May, 28, 2012
இலங்கை::சட்டவிரோதமாக, கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாசெல்வதற்கு முயற்சித்த 113 பேர் பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, ஜா-எல, உடப்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த குழுவினரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு முயற்சித்த ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக ஒருவரிடம் இரண்டு இலட்ச ரூபா முற்பணம் பெறப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா சென்ற பின்னர் மேலும் 13 இலட்ச ரூபா வழங்கப்படும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த படகை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment