Monday, ,May, 28, 2012
இலங்கை::கொழும்பு கிராண்ட்பாஸ் வதுல்லவத்த பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர், நேற்றிரவு இங்குறுகடை பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தமது வீட்டிற்கு அருகில், வேனொன்றில் வருகைதந்த குழுவினர் தம்மை கடத்திச்சென்று, பின்னர் இங்குறுகடை பகுதியில் விடுவித்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினை அடுத்து, நேற்றிரவு பிரதேசவாசிகள் பேலியகொட களனி பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

No comments:
Post a Comment