Monday, May 28, 2012

நடிகர் அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு இரகசிய விஜயம்!!

Monday, ,May, 28, 2012
இலங்கை::பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு இரசிய விஜயமொன்றை மேற்கொண்டதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அருண் பாண்டியன் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்சியின் தலைவராக பிரபல நடிகர் விஜயகாந்த் கடமையாற்றி வருகின்றார்.

பிரபல வர்த்தகர் ஒருவருடன் அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.

ஒரு மாத வீசாவில் அருண் பாண்டியன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் இணுவில் பகுதியல் அருண் பாண்டியன் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அருண் பாண்டியன் சில தமிழ் அரசியல்வாதிகளுடன் இரகசிய சந்திப்பு நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment