Monday, ,May, 28, 2012
இலங்கை::போர்ச் சூழல் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தமொன்றை மிகவிரைவில் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்பிக்கவுள்ளதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் (26.5.2012) மாலை புதிய காழி நீதிமன்ற கட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் போருக்குப்பின்னரான சூழ் நிலையில் போர்ச் சூழலின் போது காணிகளை பலாத்காரமாக இழந்தவர்கள், காணிகளை குறைந்த விலையில் விற்பணை செய்தவர்கள் போன்றோரின் காணிகளை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் மிகவும் கூடுதலான சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இதனால் ஆட்சியுரிமை மாற்றத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான சட்ட திருத்த மொன்றை விரைவில் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கவுள்ளேன்.
கடந்த கால கால போர்ச்சூழல்கள் காரணமாக தங்களது காணிகளை விட்டு இடம் பெயர்தவர்கள், இந்த சூழ் நிலையினால் காணிகளை விட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்டவர்கள் அச்சத்தின் காரணமாக மிகக் குறைந்த விலைக்கு காணிகளை விற்பணை செய்தவர்கள் காணி உரிமைகளை இழந்துள்ளார்கள், இடம் பெயர்ந்தவர்களின் காணிகளும் பின்னர் அடாவடித்தனமாக சிலர் கைபப்ற்றியுள்ளனர்.
பத்து வருடங்கள் காணியில் இருந்தவர்கள் சொந்தமாக்கி கொள்ளும் ஆட்சியுரிமை சட்டத்தின் மூலம் காணிகள் இவ்வாறு இழக்கப்பட்டுள்ளன. இதனை சீர் செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும்.
இவ்வாறு காணிகளை இழந்தவர்கள் இந்த காணி ஆட்சியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்படுவதன் மூலம் அவர்களின் காணிகளை மீள பெற்றுக்கொள்ள முடியும். யுதத்திற்கு பின்னரான சூழ் நிலையில் நல்லினக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் எல்லா சமூகத்திற்கும் நன்மை ஏற்படும்.
காழி நிதிமன்றங்களின் பௌதீக வழங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே காத்தான்குடியிலுள்ள இந்த காழி நீதிமன்றத்திற்கும் நிரந்தரமான நட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 14 காழி நீதி மன்ற கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ள அதே நேரம் அடுத்த வருடமும் இதே போன்று 14 காழி நீதிமன்ற கட்டிடங்களை நிர்மானிக்கவுள்ளோம்.
இதற்காக எமக்கு உதவி வரும் ஜனாதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதே நேரம் காழி நீதி மன்றங்கள் இருக்கின்ற போதும் அவைகளுக்கு அதிகாரங்கள் ஏற்கனவே இருக்க வில்லை.
இந்த விடயம் நீண்ட காலமமாக பாராளுமன்றத்தில் பேசி வந்த நிலையில் பின்னர் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னர் சரத் சின் சில்வா பிரதம நிதியரசராக இருந்த போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு காழி நீதிபதகளின் அந்தஸ்த்து உயர்த்தப்பட்டது.
சரத் என் சில்வா தற்போது அரசாங்கத்தை அவ்வப்போது விமர்சிக்கும் ஒருவராக இருந்தாலும் அவர் இந்த காழி நீதிபதிகளின் அந்தஸ்த்தை உயர்த்தியமைக்காக நாம் அவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு முன்னர் காழி நீதிமன்றங்கள் பொது நிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்தன. நீதி மன்றங்களுக்குரிய அந்தஸ்த்து இருக்கவில்லை. அது பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் மாற்றப்பட்டதையடுத்து இப்போது நீதிமனறத்திற்குரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.
காழி நீதிபதிகளின் தீர்ப்புக்களிடையே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன குறித்த பிணக்குகள் அடிக்கடி மேன் முறையீடு செய்யப்படுகின்றன. இதனால் சில புதிய திருத்தங்களை கொண்டுவர ஆலோசித்து வருகின்றோhம்.
முஸ்லிம் நீதவான்களை காழி நீதிபதிகளாகவும் நியமிக்கவும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன இதற்காக நீதியரசர் சலீம் மர்சூக் தலைமையில் குழு வொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதமளவில் கிடைக்கும் என நினைக்கின்றேன். அதை கொண்டு சில திருத்தங்களை செய்ய முயற்சி செய்கின்றோம். பிணக்குகளை தீர்த்து வைப்பதில் எதிர் நோக்கும் சிக்கல்கள் புதிய சிபாரிசுகள் என்பன இதில் ஆலோசிக்கப்படும்.
இது விடயமாக தற்போதய பிரதம நீதியரசரிடமும் பேசியுள்ளோம். காழி நிதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் நிதிகளை ஓதுக்கீடு செய்துள்ளோம்.
அந்த வகையில் இந்த காத்தான்குடி காழி நீதிமன்ற கட்டிடத்திற்கு தேவையான சுற்றுமதிலும் அமைத்து தரப்படுமென அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment