Monday, ,May, 28, 2012
சென்னை::இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் எச்ஐவி, எய்ட்ஸ், பன்றிக் காய்ச்சல், காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கண்காட்சியுடன் கூடிய ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த 9ம் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கியது. திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. அங்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த ரயில் 11வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டு, கண்காட்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், சபாநாயகர் ஜெயக்குமார், மேயர் சைதை துரைசாமி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் மோகன்தாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அங்கு ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. ரயிலின் முதல் 3 பெட்டிகளில் எச்ஐவி, எய்ட்ஸ் பற்றியும், 4வது பெட்டியில் காசநோய், மலேரியா, பன்றிக்காய்ச்சல், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், பொது ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்தும் விளக்க படங்கள், பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
5வது பெட்டியில் எச்ஐவி ஆலோசனை மையமும், 6வது பெட்டியில் சுய உதவிக்குழு பெண்கள், சுகாதார நலப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு பயிற்சி அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7, 8வது பெட்டிகள் அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. முக்கியமாக 5வது பெட்டியில் இலவச எச்ஐவி ரத்த பரிசோதனைக்கு தனிஇடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், என்சிசி மாணவர்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் ஒவ்வொரு பெட்டியாக சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஒரு சிலர் எச்ஐவி பரிசோதனையும் செய்து கொண்டனர். ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மாலை 6 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.
திட்ட இயக்குனர் மோகன்தாஸ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஆண்கள் 1,60,179 பேரும், பெண்கள் 2,95,217 பேரும் என 4,55,396 பேர் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருநாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். 30ம் தேதி சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்கிறது’’ என்றார்.

No comments:
Post a Comment