Monday, May 28, 2012

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை அனுப்பவேண்டும் - முதல்வர் ஜெயலலிதா!

Monday, ,May, 28, 2012
சென்னை::முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் இல்லையென்றால் தமிழக போலீஸை அனுப்புவோம். என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:- இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, ஒரு ஆய்வுக்குழுவை அமைத்ததை நீங்கள் அறிவீர்கள். அணையின் கட்டுமான வலிமை குறித்து மொத்த வலிமை குறித்தும் சோதனை செய்ய துளைகள் போடப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு நிலவரத்தை அறிவதற்கு தொடர்ந்து பல சோதனைகள் மேற்கொள்ள ஆய்வுக்குழு உத்தரவிட்டது.அதன் படி பல சோதனைகள் நிறைவேற்றப்பட்டன. மழைக்காலம் வருவதன் அடிப்படையில் அந்த துளைகள் தற்போது மூடப்படவேண்டும். துளைகளை மூட ஆய்வுக்குழு பிறப்பித்த உத்தரவுகளுக்கு மாறாக தமிழக அதிகாரிகள் இந்த துளைகளை மூடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை கேரள அரசு கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம் ஆனால் எந்தப் பலனும் இல்லை. முல்லை பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே துளைகளை மூடுவது அவசியம். அணையின் கட்டுமானம் பலவீனப்பட வேண்டும் என்ற சதியை உள்நோக்கமாக கொண்டு நாங்கள் துளைகள் மூடுவதை தடுத்துவருவதாக கூறுகிறது. குறிப்பாக ஆய்வுக்குழு நடத்திய சோதனையில் அணை வடிவ அடிப்படையிலும் நில அடிப்படையிலும் நீர் அடிப்படையிலும் பாதுகாப்பாக உள்ளது நீர் மட்டத்தை 140 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அணையின் பாதுகாப்புக்காக மட்டுமே கேரள போலீஸ் அணை ஸ்தலத்தில் முகாமிட்டுள்ளது.அணைக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அணையின் பராமரிப்புமற்றும் முக்கிய வடிவத்தை பாதுகாப்பை தமிழக பொறியாளர்கள் மேற்கொள்ளாமல் தடுப்பதற்கு போலீசை கேரள அரசு பயன்படுத்தி வருகிறது. கேரள அரசின் இந்த நோக்கம் தவிர்க்கப்பட வேண்டும், சரி செய்யப்பட வேண்டும். 25.12.2011 அன்று நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழிற்துறை படையை இறக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொண்டதை நீங்கள் நினைவு கூறலாம். இந்த வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் துளைகளை மூடும் தமிழக அதிகாரிகளின் பணிகளை தடுக்கக்கூடாது என்று கேரள அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.கேரள அரசு முறையற்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படுமானால் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கைக்கு இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்திற்கு குத்தகையாக விடப்பட்டுள்ள பகுதியில் தன்னுடைய போலீஸ் படையை அனுப்புவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை.

இந்த விவகாரத்தில் தங்களின் உடனடி நடவடிக்கையை எதிர்ப்பார்க்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment