Tuesday, ,May, 29, 2012
இலங்கை::கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புளத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் லக்மினி பண்டிதரத்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட சந்தேகநபரால் நேற்று மாலை இரத்தினபுரி பகுதியில் அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
லக்மினி பண்டிதரத்ன பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆயுதமேந்திய குழுவினரால் தாம் கடத்தப்பட்டதாகவும், பின்னர் பல்வேறு இடங்களில் தாம் தடுத்துவைக்கப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment