Tuesday, May 29, 2012

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலையச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிங்கபூருக்கு இன்று அதிகாலை செல்லவிருந்த வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 75 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண், யூரோ ஆகிய நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன...

பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு 25,000 ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்ததாகக் கூறப்படும் ஒருவர் நிக்கவரெட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசெல்வதற்கு முயற்சித்த போது, கைதுசெய்யப்பட்ட இருவரை விடுவிக்கும் நோக்கில் சந்தேகநபர்கள் இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 22 மாடுகளும், லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment