Tuesday, May 29, 2012

முப்படைகளுக்கான நிதியை மும்மடங்காக உயர்த்தி உத்தரவு: ஏ.கே.அந்தோனி!

Tuesday, ,May, 29, 2012
புதுடெல்லி::முப்படைகளும் தங்களுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை விரைந்து பெற்றுகொள்ளும் வகையில் ராணுவத்திற்கான நிதியை மும்மடங்காக ரூபாய் 50௦ கோடியிலிருந்து 150 கோடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அட்மிரல் நிர்மல் வெர்மா, ஜெனரல் வி.கே. சிங் மற்றும் ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனே மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தின் போது இதனை தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது பாதுகாப்பு துறை செயலாளர் சஷிகாந்த் ஷர்மாவும் உடனிருந்தார். சமீபத்தில் பாதுகாப்பு துறை அமைச்சகம் 15 வருட ஒருங்கிணைந்த நோக்க திட்டம் மற்றும் 12 வது பாதுகாப்பு திட்டம் போன்றவைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தங்களுக்கு தேவையான தளவாடங்களை தாங்களாகவே தயாரித்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment