Tuesday, ,May, 29, 2012
கொல்கத்தா::ஐபிஎல் பைனலில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் முறையாக பட்டம் வென்று அசத்திய அந்த அணிக்கு மேற்கு வங்கத்தில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த அணி பட்டம் வென்றதை தொடர்ந்து மாநில அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது. காலை 11 மணி அளவில் கொல்கத்தா அணி வீரர்கள் சாம்பியன் கோப்பையுடன் ஹசரா பகுதியில் இருந்து ரைட்டர்ஸ் பில்டிங் வரை சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது வீரர்களுக்கு ரசிகர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து ஈடன் கார்டன் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள், திரையுலக நட்சத்திரங்கள், கொல்கத்தா அணி ஓனர் ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கொல்கத்தா அணியின் வெற்றியை குறிக்கும் விதமாக பல்வேறு வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த பாராட்டு விழாவை காண்பதற்காக மைதானத்தில் அனைத்து வாயில்களும் ரசிகர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டது. இசைவாத்தியங்கள் முழங்க பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment