Tuesday, May 29, 2012

கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Tuesday, ,May, 29, 2012
கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

முஸ்லிம் எம்.பிகள் சிலரை மேயர் முஸம்மில் தம்புள்ளை ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய கலாசாரத்திற்கு விரோதமான செயல்களை செய்வதற்கு ஊக்குவித்ததாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான மொஹமட் மஹ்ரூப் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக மேயர் முஸம்மில் கருத்துத் தெரிவிக்கையில், தனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரளி ஏற்படுத்த முனைவதாக கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பிளவேற்பட்டுள்ளமையாலேயே நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டுவர அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
'அவர்களிடையே பிளவேற்பட்டுள்ளமைக்கு என்னை குற்றம் சுமத்துகிறார்கள்' என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment